
கீழக்கரை, இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் 74வது சுதந்திர தின விழா இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளி கடைபிடிடக்கப்பட்டு நடைபெற்றது.
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபெல் ஜஸ்டஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் முன்னாள் மாணவியும், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக மருத்துவம் பார்த்துவரும் டாக்டர் இந்துஜா தேசியக்கொடி ஏற்றினார். இஸ்லாமியா துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தனலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முஹம்மது முஸ்தபா நன்றியுரை நல்கினார் . இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி, உயர் நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.