Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் பொதுமக்கள் சேவைக்கு புதிய மருத்துவமனை திறப்பு..

கீழக்கரையில் பொதுமக்கள் சேவைக்கு புதிய மருத்துவமனை திறப்பு..

by ஆசிரியர்

கீழக்கரையில், கீழக்கரை மக்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட “10” ரூபாய் மருத்துவமனை என கூறப்பட்ட PEEYESYEM மருத்துவமனை மற்றும் PEEYESEM மருந்தகம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.  இந்த மருத்துவமனையில் ₹.10/- ரூபாய்க்கு தரம் வாய்ந்தத சிகிச்சை மக்களுக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த மருத்துவமனை கீழக்கரை ஹமீதியா தொடக்க பள்ளி எதிரே உள்ள பழைய திருமண மண்டபத்தில் இன்று (27/12/2018)காலை முதல் புதிதாக ஆரம்பம் ஆகி உள்ளது.

மேலும் இதன் தொடர்ச்சியாக மக்களின் சேவையை கருத்தில் கொண்டு PEEYESEM Training academy மற்றும் GRANDBIZ GARMENTS ஆகியவை மக்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையை நிர்வாக இயக்குநர் ஹபிபுல்லாஹ் கான் திறந்து வைத்தார். மேலும் இதில் எஸ்.எஸ்.எம்.அகமது உசேன், தாசில்தார் தமீம் ராசா, எம்.கே.சதக் அப்துல் காதர், சதக் அன்சாரி, கீழக்கரை டைம்ஸ் யாசின், மக்கள் அறக்கட்டளை நிறுவனர் உமர் அப்துல் காதர், மக்கள் டீம் காதர், ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம், கீழக்கரை ஜமாத் பிரமுகர்கள், உஸ்வத்துன் ஹசானா முஸ்லீம் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இம்மருத்துவமனையின் சேவை சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!