
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பலஆண்டுகளாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் தனியார் கட்டிடங்களில் இயங்கி வந்தது.
இந்நிலையில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலம், தாலுகா அலுவலகம் செயல்பட்டு வந்தது. இதனால் கடும் இட நெருக்கடி ஏற்ப்பட்டது. இதையடுத்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் தனிகட்டிடம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பொதுப்பணிதுறை மூலமாக சுமார் 20 லட்சம் செலவில் நகராட்சிக்கு அருகிலேயே கட்டிடம் கட்டினர். இதை கடந்த ஜீன் மாதம் கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜா திறந்து வைத்தார்.இங்கு வருவாய் ஆய்வாளராக பார்கவி என்ற பெண் ஆய்வாளர் நியமிக்கப்பட்டார்.ஆனால் அந்த கட்டிடத்தை சுற்றியும், கட்டிடத்திற்க்கு முன்பாக குப்பைகள் மற்றும் கழிவுநீர் சேர்ந்து சாக்கடையாக மாறிவிட்டது.இதனால் பொதுமக்கள் அலுவலகத்திற்க்குள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதை விட கொடுமை கட்டிடம் முன்பாக பல நபர்கள் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்குள்ள வருவாய் ஆய்வாளர் பணியாற்ற முடியாமல் தவித்து வருகிறார். இதுபற்றி மாவட்ட நிர்வாகமும், கீழக்கரை நகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழை நியூஸ்
SKV முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.