கீழக்கரையில் ஒன்றிய அரசை கண்டித்து திமுகவினர் மற்றும் தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

தமிழகம் முழுவதும் இன்று (20/09/2021) ஒன்றிய அரசை வேளாண் சட்டங்கள், பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்டவையை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் திமுக நகர செயலாளர் S.A.H பஷீர் அகமது தலைமையில்,  வழக்கறிஞர் ஹமீது சுல்தான் திமுக இளைஞரணி அமைப்பாளர்  அறிவுறுத்தலின்படி திமுக மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் அசன் மற்றும் திமுக மாணவரணி துணை அமைப்பாளர் மீரான் அலி, திமுக ஐடி விங் துணை அமைப்பாளர் நசுருதீன்  மற்றும் திமுக கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசை எதிர்த்து கோஷமிட்டனர்.

அதே போல் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரசெயலாளர் பாஸித் இல்யாஸ் தலைமையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும் விலைவாசி உயர்வை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும் என்றும் பெட்ரோல் பங்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..