கீழக்கரை திமுக நகர் செயலாளர் முகநூல் மூலமாக விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அழைப்பு…

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலத்தின் பிரதான எதிர்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் வரும் ஏப்ரல் 25ம் தேதி முழு கடையடைப்புக்கு கடந்த வாரம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் இயற்றி அழைப்பு விடுத்து இருந்தது.

அதைத் தொடர்ந்து இன்று (22-04-2017) கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அஹமது தலைமையில் அனைத்து தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் கீழக்கரை திமுக நகரச் செயலாளர் முகநூல் மூலமாகவும் விவசாயிகள் ஆதரவு வேலைநிறுத்ததிற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.