கீழக்கரைக்கு நிரந்தர ஆணையர் நியமனம் தாமதம் ஏன்?? மக்கள் டீம் அமைப்பு கோரிக்கை மனு..

கீழக்கரையில் நிரந்தர ஆணையர் இன்றி நகராட்சி பணிகள் அனைத்தும் கிடப்பில் உள்ளது ஏ. கூடுதல் பொறுப்பு வகிக்கும் பரமக்குடி ஆணையாளர் கீழக்கரைக்கு எப்போது வருகிறார் என்பது நகராட்சி அலுவலர்களுக்கும் தெரிவதில்லை, மக்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. 

அதே போல் நகர் பிரச்சினைக்காக நகராட்சி அலுவலகத்துக்கு போண் செய்தாலும், யாரும் எடுப்பதில்லை, எடுத்தாலும் பதில் கிடைப்பதில்லை. மேலும், தொலை தொடர்பு சாதனங்கள் பலவும் கீழக்கரையில் அடிக்கடி பழுது ஏற்பட்டுகிறது. இதனால் அரசு அலுவலக பணிகள், இ-சேவை மைய பணிகள், வங்கிகள் மற்றும் தனி நபர் உபயோகிக்கும் செல் மற்றும் வீடுகளில் உபயோகிக்கும் லேண்ட் லைன்,  வைஃபை போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டி, டிராய் ( தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ) அமைப்பில், கீழக்கரை  நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் மற்றும் மக்கள் டீம் இணைந்து அளித்த புகாரின் பேரில் வருகின்ற 23, 24,25 ஆகிய மூன்று தேதிகளில் ஏதேனும் ஒரு நாளை தேர்ந்தெடுத்து, பொதுமக்கள்  கலந்துரையாடல் நிகழ்வு ஏற்படுத்த இடம் தேர்வு செய்ய சொன்னதின் பேரில், நகராட்சி கூட்ட அரங்கை ஆணையாளரிடம் கேட்பதற்காக பல முறை போன் செய்தும் தொடர்பு கொள்ள முடியாத சூழலே உள்ளது.

இதனை தொடர்ந்து கீழக்கரை நகரில் நிலவும் அனைத்து கோரிக்கைகளையும் வலியுறுத்தி  நிரந்தர ஆணையாளரை பணியில் அமர்த்தகோரி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்யப்பட்டுள்ளது.