கீழக்கரை நுகர்வோர் உரிமை பாதுகாப்புக்கழக செயலாளருக்கு சுதந்திர விழாவில் பாராட்டு ..

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் மதினா ரத்த பரிசோதனை நிலையம் உரிமையாளர் செய்யது இபுறாகீம். இவர் நூகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழகத்தின் கீழக்கரை செயலாளராக இருந்து பல சேவைகள் செய்து வருகின்றார். இவரின் சேவையை பாராட்டியும், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகத்தில் சிறப்பான சேவை புரிந்தமைக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இவருக்கு இராமநாதபுரம் காவலர் மைதானத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உள்பட மாவட்ட முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்

இவருக்கு கீழை நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.