ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (முள்ளுவாடி) தாளாளர் அனீஸ் அஹமது தலைமையில் 80 வது ஆண்டு விழா நடைபெற்றது. உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் ஹமீது ஃபாரூக், அகமது ரிஃபாய், சுலைமான், ஹமீது பைசல், தைக்கா அப்துல் கயூம் மற்றும் சிராஜ், ஆதம் சபீர், அஜ்ஹர், யூசுப் ஆலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ஜவஹர் பாரூக் வரவேற்புரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினராக செய்யத் ஹமீதா கலை & மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இராஜசேகர், முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் ஷேக் தாவூது, ஹமீதியா மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பிரமிளா, ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் லதா, ஹமீதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹமீது நிஷா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் முதுகலை ஆசிரியர் நாசர் நன்றி உரை வழங்கினார். விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர் பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
64
previous post
You must be logged in to post a comment.