Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை நகர் மன்ற தலைவர் பேச்சுரிமை பறிப்பு ! நகர்மன்ற உறுப்பினர் மகளிர் தின வாழ்த்து !!

கீழக்கரை நகர் மன்ற தலைவர் பேச்சுரிமை பறிப்பு ! நகர்மன்ற உறுப்பினர் மகளிர் தின வாழ்த்து !!

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டரங்கில் நகர மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நகராட்சி ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் 1 வது வார்டு உறுப்பினர் பாதுஷா கீழக்கரையில் வடக்கு தெரு டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து நெடுஞ்சாலை வரை 500 மீட்டர் புதிய சாலை அமைப்பதற்கு தில்லையேந்தல் பஞ்சாயத்து நிர்வாகம் புறக்கணித்து வருகிறது இதில் கீழக்கரை மக்கள் மற்றும் அவசர ஊர்திகள் செல்ல மிகுந்த சிரமப்பட்டு வருவதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் தலையிட்டு தாங்களே முன்வந்து சாலை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் மேலும் சாலை அமைக்கவில்லை என்றால் சாலையில் உருண்டு பிரண்டு போராட்டம் நடத்துவேன் என்று எச்சரித்தார். அதனைத் தொடர்ந்து பன்னிரண்டாவது வார்டு உறுப்பினர் உம்முல் சல்மா கூறுகையில் கருவாட்டுக் கடை பகுதியில் இருந்து பிக் பஜார் வரை கழிவுநீர் வாருகால் அமைத்து தர வேண்டும் என்றும் முத்தலிபு அரிசி கடை பகுதியில் வாருகால் குழாய்கள் மறுசீரமைக்கு தர வேண்டும் என்றும் நீண்ட நாளாக கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 19 ஆவது வார்டு உறுப்பினர் சப்ராஸ் நவாஸ் கூறுகையில் நகராட்சியில் போதுமான நிதி பற்றாக்குறை இருப்பதால் நகராட்சியின் நிதியை கருத்தில் கொண்டு முக்கியமான தீர்மானங்களை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இருபதாவது வார்டு உறுப்பினர் ஷேக் உசேன் கூறுகையில் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற பெண் உறுப்பினர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து போற்றி புகழ்ந்தார். அதனைத் தொடர்ந்து நகராட்சியில் டெண்டர் விடப்பட்டு அதன் வேலைபாடுகளை கள ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என்று கடந்த நகர்மன்ற கூட்டத்தில் தெரிவித்த போது அமைத்து தருவதாக துணைத் தலைவர் வாக்குறுதி அளித்தார் அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை என இருபதாவது வார்டு உறுப்பினர் ஷேக் உசேன் விளக்கம் கேட்டார். பதில் அளிக்காமல் அமர்ந்திருந்தார் துணைத் தலைவர். கூட்டத்தில் விவாதங்கள் நடைபெறும் பொழுது நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் பொழுது நகர் மன்ற தலைவரை பேச விடாமல் தானாகவே முன்வந்து பதில் கூறி வருகிறார். அவரிடம் வைத்த கேள்விக்கு பதில் கூறாமல் மன்றத் தலைவரிடம் கேட்கும் கேள்விக்கெல்லாம் இடைமறித்து பேசுகிறார். இதனால் நகர் மன்ற உறுப்பினர்கள் கூறும் கோரிக்கைக்கும் முறையாக நகரமன்ற தலைவரால் பதில் அளிக்க முடியவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளது. நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் இருந்தும் அவர்களிடம் கேள்வி எழுப்பினார் அவர்கள் பதில் கூற விடாமல் ஏன் துணைத் தலைவர் தடுக்கிறார் என்பது சில உறுப்பினர்களிடம் கேள்வியாகவே இருந்துள்ளது. அடையாளப்படுத்துவதற்காக முன் வருகிறாரா என்ற சந்தேகங்கள் எழுகிறது இதனால் நகர்மன்றத்தில் தீர்மானங்கள் முறையாக விவாதிக்க முடிய வில்லை என்று வருத்தப்படுகின்றனர். இனிவரும் நகர்மன்ற கூட்டங்களில் நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் முறையாக உறுப்பினருக்கு பதிலளித்தால் மட்டுமே இது போன்ற குழப்பங்கள் தீரும் என்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்றும் பொதுவான கருத்தாகவே உள்ளது. மேலும் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட கூட்டம் 20 நிமிடங்களில் முடிந்தது .

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com