இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மஹாலில் உணவு பாதுகாப்புத் துறை சம்பந்தமாக உணவு கடைகள் பேக்கரிகள் ஹோட்டல் பெட்டிக்கடைகள் மளிகை கடைகள் ஆகியோர்க்கு உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் , பரமக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாநிதி ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ஆகியோர் முன்னிலையில் உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வியாபாரத்தின் அளவுகள் பற்றியும் வாடிக்கை யாளர்களின் அணுகுமுறை பற்றியும் பொருட்களின் தரம் பற்றியும் பொருள்களில் உற்பத்தி செய்யும் தேதிகள் மற்றும் காலவாதியாகும் தேதிகள் குறிப்பிடுதல் பற்றியும் பயிற்சியாளர் சலீம் எடுத்துரைத்து பயிற்சி அளித்தார். மேலும் அரசு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்வதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். இதில் கீழக்கரை சுற்றுவட்டார வியாபாரிகள் , கீழக்கரை வர்த்தக சங்கம் மற்றும் மருந்தாளர் நல சங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
60
You must be logged in to post a comment.