Home செய்திகள்மாநில செய்திகள் கோவிலுக்கு போய் கோடீஸ்வரன் ஆன நபர், நடந்தது என்ன..

கோவிலுக்கு போய் கோடீஸ்வரன் ஆன நபர், நடந்தது என்ன..

by Askar

கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு லாட்டரி குலுக்கல் கடந்த ஜனவரி 24ஆம்தேதி நடைபெற்றது.

குலுக்கலின் முதல் பரிசு ரூ.20 கோடி (3.2 மில்லியன் வெள்ளி) ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த குலுக்கலுக்காக கிட்டத்தட்ட 4.5 மில்லியன் லாட்டரி சீட்டுகள் விற்பனையாகின.

எக்ஸ் சி 224091 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டு விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த எண் கொண்ட லாட்டரி சீட்டு பாலக்காட்டில் மொத்த விற்பனையாளரிடம் இருந்து வாங்கி வந்து திருவனந்தபுரத்தில் உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் முதல் பரிசு பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி யார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் சபரிமலைக்கு வந்த புதுச்சேரியை சேர்ந்த 33 வயதான பக்தர் வழிபாட்டை முடித்து விட்டு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு வந்தபோது இந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கியதாக கூறியுள்ளார். மேலும் அவர், தனது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால், கேரள லாட்டரி இயக்குநரகமும் அவரது பெயரை வெளியிட மறுத்து விட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தனது நண்பர்களுடன் லாட்டரி இயக்குநரக அலுவலகத்திற்கு வந்த அந்த வாலிபர் முதல் பரிசு கிடைத்த அந்த லாட்டரி சீட்டை அலுவலகத்தில் ஒப்படைத்து சான்றிதழ் பெற்றுக் கொண்டார். ரூ.20 கோடி பரிசு தொகையில், அதிர்ஷ்டசாலியான அய்யப்ப பக்தருக்கு வரி நீக்கிய பிறகு ரூ.12.60 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!