Home செய்திகள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முறையான பாதுகாப்பு தராமல் மிகவும் கஷ்டபடுத்தி அனுப்பியது தமிழக காவல்துறை -ஆம்ஆத்மிகட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கண்டனம்!..வீடியோ பதிவு.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முறையான பாதுகாப்பு தராமல் மிகவும் கஷ்டபடுத்தி அனுப்பியது தமிழக காவல்துறை -ஆம்ஆத்மிகட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கண்டனம்!..வீடியோ பதிவு.

by ஆசிரியர்

திமுக தலைவர் மு. கருணாநிதி மறைவையொட்டி அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் வந்த பொழுது முறையான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என சர்ச்சை நிலவி வரும் வேளையில்,  இறுதி அஞ்சலி செலுத்திட வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் முறையான பாதுகாப்பு தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதை அசத்தல் டி.வி எனும் இணைய தள டி.வி வெளியிட்டுள்ளது.

அஞ்சலி செலுத்த வந்த கெஜ்ரிவால் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளானார், தமிழக போலீசு ஒரு முதல்வருக்கு முறையே தர வேண்டிய பாதுகாப்பை தரவில்லை, டெல்லி முதல்வரும் தாக்கப்படும் வகையில் அவர் இருக்கும் இடத்திலேயே தடியடி நடத்தப்பட்டது. அருகில் இருந்த நாங்களும் மற்ற சிலரும் அவரை அப்படியே மேலே தூக்கினோம், அப்பொழுது பால்கனிக்குள் நின்ற காவல்துறையை சேர்ந்த சிலர் அவரை அலேக்காக மேலே தூக்கினார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பெரும் ஆபத்திலிருந்து தப்பினார் என்பதே உண்மை.

ஆனால் அன்று பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வர்,  தமிழக அமைச்சர்களுக்கு மட்டுமே சிறப்பான பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இவர்கள் வரும் போது யாரும் உள்ளே செல்ல அனுதிக்கபடவில்லை.  மோடி, எடப்பாடி பழனிசாமி வந்து அஞ்சலி செலுத்தி சென்ற பின் அங்கிருந்த காவல் தடுப்புகள் அகற்றப்பட்டன, கூட்டத்தை முறைபடுத்தி உள்ளே அனுப்பி வந்த காவலர்களும் சென்றுவிட்டனர்.  கூட்டத்ததை கட்டுபடுத்தி வந்த காவல்துறை வெளியேறியது ஏன்? பொது மக்களுக்கும் தலைவர்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டிய தமிழக காவல்துறை செய்தது சரியா?

காவல்துறையின் அலட்சியத்ததால்  தான் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ளளனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர், பிரதமர், தமிழக முதல்வர் தவிர மற்ற பெரும்பாலான தலைவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று திரும்பி சென்றுள்ளனர். மக்களிடமிருந்து சம்பளம் பெற்று வாழ்க்கையை செம்மைபடுத்தி வாழ்ந்து வரும் காவல்துறை தோழர்கள் மக்களை பாதுகாக்க தவறியது சரிதானா, அரசியல் மற்றும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளுக்கும் ஏவல்களுக்கும் ஆட்பட்டு மக்களை காக்க தவறியிருப்பது ஜனநாயாகத்திற்கும் இநதியாவின் வளர்சிக்கும் நல்லதல்ல, தமிழக காவல்துறையின் அன்றைய நடவடிக்கைகள் முற்றிலும் தவறானது இதற்கு ஆம்ஆத்மிகட்சி சார்பாக கண்டத்தை தெரிவித்து கொள்கிறேன் என வசீகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!