கீழை மர செக்கில் எண்ணெய் வாங்கினால் மரக் கன்றுகள் அன்பளிப்பு

கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி பின்புறம், கீழை மரச் செக்கு என்கிற பெயரில் வியாபார ஸ்தாபனம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு வாகை மர செக்கில் நல்லெண்ணை, கடலெண்ணை, தேங்காய் எண்ணை ஆகியவை இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முதல் தரமான வித்துக்களையும், மூலப்பொருட்களையும் கொண்டு ஊட்டச்சத்துக்ளும், புரோட்டின்களும், வைட்டமின்களும் குறைபடாத வகையில் பொதுமக்களின் நேரடி பார்வையிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் நம் கீழக்கரை மக்கள் மத்தியிலும் கீழை மர செக்கு எண்ணெய் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கீழை மர செக்கு எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் வாங்குபவர்களுக்கு நிழல் தரும் மரக் கன்றுகள் மற்றும் பழச் செடிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நல்லதொரு முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..

1 Comment

  1. மகிழ்ச்சி, வளர்க இவர்களுடைய தொழில். எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்வானாக , ஆமீன்.

Comments are closed.