Home செய்திகள் கீழக்கரை நகர அபிவிருத்தி திட்டத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

கீழக்கரை நகர அபிவிருத்தி திட்டத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

by ஆசிரியர்

கீழக்கரை நகர் வளர்ச்சி அறக்கட்டளை (Kilakkarai Town Development Trust) சார்பாக இன்று தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் சென்னை எக்ஸனரா பசுமை(பம்மல்)பவுண்டேஷன் திட்ட மேலாளர்கள் கவிதா,டாக்டர் ஜெயலட்சுமி ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் இன்று (13/09/2017) நடைபெற்றது. இக்கூட்டத்தின் கீழக்கரை நகர் வளர்ச்சி அறக்கட்டளை கீழக்கரை மேலாளர் சேக் தாவூது மற்றும் தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழக்கரை நகரில் சேகரிக்கப்படும் அழியும் மற்றும் அழியாத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சியில் மாற்று பொருளாக உருவாக்குவது போன்ற ஆலோசனைகள் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, இதன் சாத்தியக்கூறுகள் ஆராய்பட்டு கீழக்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை மூலம் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அறியப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஹைரத்துன் ஜலாலியா மேல் நிலைப்பள்ளி தாளாளர், வடக்குத்தெரு ஜமாஅத் , மின்ஹாஜியார் ஜமாத் மற்றும் கிழக்குத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், முன்னாள் நகர் மன்ற நிர்வாகிகள், கீழக்கரை செஞ்சிலுவை சங்க தலைவர், கீழக்கரை நகர் நல இயக்க செயலாளர், காங்கிரஸ் கட்சி கீழக்கரை நகர் தலைவர், கீழக்கரை கிளீன் சிட்டி ஒருங்கிணைப்பாளர், மக்கள் நல பாதுகாப்புக் கழகம் செயலாளர், கீழக்கரை வெல்பர் அசோசியேசன் மற்றும் ஹமீதியா ஆண்கள் மேல் நிலை பள்ளி பிரதிநிதிகள், செய்து ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com