Home செய்திகள் கத்தார் அரசுமருத்துவமனை மருத்துவரின் பிரிவுஉபசரிப்பு நிகழ்வு.!!

கத்தார் அரசுமருத்துவமனை மருத்துவரின் பிரிவுஉபசரிப்பு நிகழ்வு.!!

by mohan

கத்தார் ஹமத் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த சமூக சிந்தனையாளர் மனிதநேய பண்பாளர் மருத்துவர்  நரேன்  தனது மருத்துவ மற்றும் மனிதாபிமான சேவையை கத்தாரில் நிறைவு செய்து கொண்டு தாயகத்தில் தொடரும் விதமாக வரும் ஜூன் 30ம் தேதி தாயகம் செல்ல இருப்பதால், அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அந்த நல்ல மனிதரை கௌரவிக்கும் விதமாகவும் பிறரை இதுபோன்ற அர்பணிப்புகளில் ஈடுபடுத்திக்கொள்ள தூண்டும் வகையில் கத்தார் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக அல்கோர் செட்டிநாடு உணவகத்தில் பிரிவு உபசரிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் கத்தார் காயிதே மில்லத் பேரவையின் தலைவர் முஸ்தபா, செயலாளர் சுஹைல், கத்தார் தமிழர் சங்கத்தின் தலைவர் விஜயன் பாபுராஜ்,ராமசெல்வம் பன்னாட்டு தி.மு.கவின் நிர்வாகி ரஷீத், தாய்மண் கலாச்சார பேரவையின் நிர்வாகி சண்முகபாண்டியன்,yafa corgo மேலாளர் ஷேய்க் முஹைதீன், சமூகஆர்வலர்அஸ்ரப் அலி ,மற்றும் மனித நேய கலாச்சார பேரவையின் நிர்வாகிகள் கலந்து கொண்டு மருத்துவர் நரேன் அவர்களின் சேவையை வெகுவாக பாராட்டினார்கள்.

அதனை தொடர்ந்து பேசிய மருத்துவர் நரேன் இந்த பிரிவு உபசரிப்பு நிகழ்வு எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்றும் இதுபோன்ற ஒரு அங்கீகரிக்கும் நிகழ்வு அனைவரையும் மனிதநேய சேவைகளில் ஈடுபடுத்திக்கொள்ள ஒரு உந்துதலாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும், உங்கள் அனைவரையும் பிரிந்து செல்வதில் வருத்தம் இருந்தாலும் என்னுடைய இது போன்ற செயல்பாடுகள் தாயகத்தில் தொடரும் என்று கூறிக்கொண்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார் .நிகழ்வை தொடர்ந்து இரவு உணவு பரிமாறப்பட்டது செட்டிநாடு உணவகம் இரவு உணவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல். #மனிதநேயகலாச்சாரபேரவை #கத்தார்_மண்டலம். 22/06/2019

செய்தி தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!