Home செய்திகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கனிமொழி…

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கனிமொழி…

by ஆசிரியர்

உலகப் பிரசித்தி பெற்ற  மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக இன்று காலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். தற்போது கோவிலுக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் உடன் சென்றனர்.  முன்னதாக கோவிலுக்கு வந்தவரை வரவேற்ற முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து இரண்டு நாள் ஆய்வு பணிக்காக  எம்.பி. கனிமொழி தலைமையில் மதுரைக்கு வந்த பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு செய்தனர்.

அப்போது கோவிலில் சாமி தரிசனம் செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும் நாடாளுமன்ற நிலை குழு உறுப்பினர்கள் தரப்பினரும் சாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரம் அருகே ஒருவரை ஒருவர் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவிலில் இருந்து விமான நிலையம் நோக்கி புறப்பட்டார். அதன் பின்னர் வந்த கனிமொழி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கோவிலில் இருந்து புறப்பட்ட போது  கோவிலுக்கு வெளியே இருந்த வளையல் கடை ஒன்றில் ஆய்வுக்கு உடன் வந்த சக பெண் எம்பி ஆன கீதாபென் வஜேசிங்பாய் ரத்வாக்கு வளையல்களையும், சாமி படத்தையும், தாழம்பூ குங்குமம் வாங்கி பரிசளித்தார்.

தொடர்ந்து பொதுமக்கள் ஒருவரின் குழந்தைக்கு ஆதன் என்ற பெயர் சூட்டினார். தொடர்ந்து கோவிலுக்கு வந்த இளம் பெண்கள் பலரும் கனிமொழியுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com