Home செய்திகள் கமுதி வட்டாட்சியரின் சீரிய முயற்சியால் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் !

கமுதி வட்டாட்சியரின் சீரிய முயற்சியால் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் !

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் – கமுதி மேற்கு உள்வட்டம் மண்டலமாணிக்கம் குரூப் கோடாங்கிபட்டி கிராமத்தில் சாலை மறு சீரமைப்பு செய்யவும் விருதுநகர் மாவட்டம் பூமாலைப்பட்டி வருவாய் கிராமம் 2019-ம் ஆண்டு மராமத்து பணி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்ட பொழுது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது அரசுக்கு பாதமாக தீர்ப்பு வரப்பெற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் கோடாங்கிபட்டி கிராம பொதுமக்கள் எதிர்வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். கிடைத்த தகவல் அடிப்படையில் மண்டலமாணிக்கம் குரூப், கோடங்கிபட்டி கிராம மக்களிடையே வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் வட்டாட்சியர் சேதுராமன் தலைமையில் இன்று (31.03.2024 ) நடைபெற்றது. இக்கூட்டத்தில் லிவாதங்கள் நடைபெற்று கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை1. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெறும் கோடங்கிபட்டி கிராம மக்கள் தொடர்பான சாலை மறுசீரமைப்பு வழக்குகள் அனைத்திலும் பிரதியாதிகளாக கோடங்கிபட்டி கிராம மக்களை சேர்க்க தீர்மானிக்கப்பட்டது.2. கோடங்கிபட்டி கிராமத்திற்கு ஆணி, பெனர் பொது கழிப்பறை வசதி செய்து தர கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.3. குடிநீர் தொட்டி (RO) சரிசெய்து தர கமுதி வட்டார வளர்ச்சி அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 4. வலையப்பட்டி சாலை சரிசெய்து தர கமுதி வட்டார வளர்ச்சி அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.5. மண்டல மாணிக்கம் பொதுப்பணித்துறை கண்மாய் பலப்படுத்த செயற்பொறியாளர் குண்டாறு வடிநீர் கோட்டம் அவர்களுக்கு கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.6. மண்டல மாணிக்கம் பொதுப்பணித்துறை கண்மாய் மற்றும் தடுப்புச்சுவர் கட்ட தடையின்மைச் சான்று வழங்க பொதுப்பணித்துறை, உதவி செயற்பொறியாளர், குண்டாறு வடிநிலம்- கமுதி உபகோட்டம் அவர்களுக்கு கடிதம் அனுப்ப திமானிக்கப்பட்டது .7. இராமநாதபுரம் மாவட்டம் 2024 நாடளுமன்ற பொதுத்தேர்தல் புறக்கணிப்பதாக கூறிய நிலையில் கமுதி வட்டாட்சியர் மற்றும் கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர், கமுதி காவல் ஆய்வாளர் முன்னிலையில் நாடளுமன்ற பொதுத் தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்றனர். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதாக முழு மனதோடு சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கேடாங்கிபட்டி பொதுமக்கள்கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர் . கமுதி வட்டாட்சியர் சேதுராமனின் உறுதி மொழியை ஏற்று வருகின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com