கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா…

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

காமராஜர் பிறந்தநாள் விழா நரசிங்கக்கூட்டம் தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் காமராஜர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்கள் “கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்கு மற்றும் பணி” பற்றி பேசினார்.
பின்னர் மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவில் ஆசிரியர் பா.தமிழ்மணி நன்றி கூறிய பின் இனிப்புகள் வழங்க விழா நிறைவு பெற்றது.