Home செய்திகள் மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது! நன்றி பாராட்டும் சத்தியபாதை மற்றும் கீழை நியூஸ் குழுமம்..

மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது! நன்றி பாராட்டும் சத்தியபாதை மற்றும் கீழை நியூஸ் குழுமம்..

by Askar

மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது! நன்றி பாராட்டும் சத்தியபாதை மற்றும் கீழை நியூஸ் குழுமம்..

சத்தியபாதை மற்றும் கீழை நியூஸ் குழுமத்தின் நிறுவனர் “சையது ஆப்தீன்”  நன்றி பாராட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6-9-2021 அன்று “சமூக மேம்பாட்டிற்காகவும். விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும். ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2021ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகப் பல ஆண்டுகள் பணியாற்றிப் பெற்றுள்ள நீண்ட அனுபவங்களையும், தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றியுள்ள அருந் தொண்டுகளையும் பாராட்டி 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கலைஞர் எழுதுகோல் விருதுக்கு திரு.வி.என் சாமி அவர்களை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சத்தியபாதை மற்றும் கீழை நியூஸ் குழுமத்தின்  சார்பாக மனமார்ந்த நன்றிகளையும், விருது பெரும் நமது குடும்பத்தின் மூத்த உறுப்பினருக்கு பாராட்டுகளையும் மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..

மேலும், ரூ.5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வி.என்.சாமி பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி அனுபவம் பெற்றவர், மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த இவர். 9-6-1931 அன்று பிறந்தவர்: தற்போது 92 வயதாகிறது.

இளமையில் பெரியாரின் உதவியாளராகத் திகழ்ந்தவர். தமிழ்நாடு, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் பணியாற்றியபின் 1968-இல் தினமணி நாளிதழில் சேர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றி, தலைமைச் செய்தியாளராக உயர்ந்து 1989ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.

பல்வேறு நூல்களைப் படைத்துள்ள வி.என்.சாமி எழுதிய “புகழ்பெற்ற கடற்போர்கள்” என்னும் நூல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மாமன்னன் ராஜராஜன் விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது என தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!