Home செய்திகள் அவனியாபுரத்தில் மண்டியிட்டு விநாயகரை வழங்கும் ஜல்லிக்கட்டு காளை

அவனியாபுரத்தில் மண்டியிட்டு விநாயகரை வழங்கும் ஜல்லிக்கட்டு காளை

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் தைத்திருநாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் இதனை தொடர்ந்து இப்பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நடைப்பயிற்சி நீச்சல் பயிற்சி மண் முட்டுதல் பயிற்சி மற்றும் வீரர்களைப் போன்ற பிடிக்கு வரும்போது துள்ளுவது ,சீறுவது போன்ற பயிற்சியில் அளிக்கப்படுகிறது .அவனியாபுரம் அய்யனார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அழகர் இவர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார் கொம்பன் திரைப்படப் புகழ் கருப்பன் காளை இவரது சிறப்பு வளர்ப்பு கொம்பன் மட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் நடித்த காளை கருப்பன் சிறப்பு பயிற்சியாக விநாயகரை மண்டியிட்டு வணங்குவது பார்வையர்களை பெரிதும் கவரும் இதற்காக பயிற்சி அளித்து வருகிறார்.மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் மாடுபிடி வீரர்கள் காளையை பிடிக்காமல் இருக்க காளைகளுக்கு இந்த பயிற்சியில் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.மேலும் நீச்சல் பயிற்சி அளிப்பதால் களத்தில் நீண்ட நேரம் நின்று மாடு சுற்றி விளையாடும் ஆகவே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இது போன்ற பயிற்சிகள் அளித்து களத்தில் இறக்குவர். இதனால் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை பிடிக்க மிகவும் சிரமப்படுவர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!