கீழக்கரை பகுதி மக்கள் மூலம் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..

கீழக்கரையில் பல் வேறு அரசியல் அமைப்புகள், சமூக நல் அமைப்புகள், தன்னார்வலர்கள் என பல தரப்பில் இருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்த வண்ணம் உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக கீழக்கரை பெத்தரி தெரு மக்கள்  நல  சங்கம் மூலமாக ₹.40,000/-திற்கு மதிப்பு உள்ள தொகைக்கு அரிசி மற்றும் மசாலா பொருட்கள் கிட்டத்தட்ட 136 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.

இந்த நிவாரண பொருட்கள் அறந்தாங்கி அருகில் உள்ள காயக்காடு என்ற பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.