முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் கலை நிகழ்ச்சி..

முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் விவசாயத்தை காப்போம் விவசாயத்தை நேசிப்போம் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் 02.03.19 அன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் நான்காம் வகுப்பு மாணவி M.அல்பஸ்லீனா இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆசிரியை அகிலா வரவேற்புரை வழங்கினார். பள்ளி முதல்வர் S.N. ஆலியா விவசாயத்தின் மேன்மையை பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கின் பற்றியும் தலைமையுரை ஆற்றினார். பல விதமான கலை நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் துயரங்களை பற்றியும்இயற்கை விவசாயத்தின் அவசியத்தைப் பற்றியும் விளக்கினார்.

இந்நிகழ்சிக்கு சிறப்பு விருந்தினராக Dr. A.R. நாதிரா பானு கமால், முகமது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிறப்பு கலந்து கொண்டார். அவர் தன் சிறப்புரையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை வெகுவாக பாராட்டினார். கலை நிகழ்ச்சிகளில் மட்டுமில்லாமல் மாணவர்கள் தன் வாழ்க்கையிலும் சிறந்து விளங்கிட வாழ்த்தினார். விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்றும் அது மட்டுமின்றி அது சார்ந்த மற்ற துறைகளிலும் நாம் பங்கு வகிக்க வேண்டும் என்றும் கூறினார்.இறுதியாக நான்காம் வகுப்பு மாணவன் W. பிட் தியான் லிரப் நன்றியுரை நல்க, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.