கீழக்கரை ஜும்ஆ பள்ளியில் பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தினம்..

கீழக்கரை, நடுத்தெரு, “அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ” ஜும்ஆ மஸ்ஜிதில் ரமளான் பிறை 17 ஆம் இரவு தராவீஹ் தொழுகைக்குப் பிறகு சங்கைமிகு பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தின நிகழ்ச்சி கீழக்கரை டவுன் காஜியும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் – ஷரீஅத் வழிகாட்டு குழு தலைவரும் ஜும்ஆ மஸ்ஜிதின் மஹல்லியுமான மவ்லவி ஃபாழில் காஜி A.M.M. காதர் பக்‌ஷ் ஹுசைன் ஸித்தீகி M.A. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  டவுன் காஜி பத்ர் யுத்தம் குறித்தும்,  சங்கைமிகு பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூறுவதைக் குறித்தும், சஹாபாக்களுடைய சிறப்புகளைப் பற்றியும் உரை நிகழ்த்தினார். பின்னர் மவ்லவி ஹாஃபிள் K. செய்யது அஹ்மது நெய்னா ஜமாலி ஸித்தீகி M.A.,M.Phil சங்கைமிகு பத்ர் ஸஹாபாக்களஉக்காக, துஆ செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஜு ம்ஆ மஸ்ஜித் இமாம்கள் மற்றும் அல்மத்ரஸத்துல் ஜாமிஆவின் ஆசிரியர்களான மவ்லவி முஹம்மது பஷீர் மிஸ்பாஹி, மவ்லவி ஹாஃபிள் செய்யது முஸ்தபா உஸ்மானி, மவ்லவி ஹாஃபிள் அப்துல் கனி மஸ்லஹி, மவ்லவி அஷ்ரப் அலி ஃபாழில் பாகவி, ஜமாஅத்தார்கள் மற்றும் மத்ரஸா மாணவர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.