கீழக்கரையில் “JFS COLLECTIONS & TRADING” என்ற புதிய கடை திறப்பு விழா!

07.02.2021 அன்று மாலை கீழக்கரை மின்ஹாஜ் பள்ளி காம்ப்ளக்ஸில் ஜே.எஃப்.எஸ் கலெக்‌ஷன்ஸ் அண்ட் டிரேடிங் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மின்ஹாஜ் பள்ளி ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது ஆலிம் முன்னிலையில் குட்டீஸ் ஜயான் சஹது கடையை திறந்து வைத்தார்.

துஆவுடன் முதல் விற்பனையை மாவட்ட அரசு காஜி மௌலானா மௌலவி சலாஹுத்தீன் ஆலிம் துவக்கி வைக்க முதல் விற்பனையை ராவியத் சுவீட் பேலஸ் உரிமையாளர் ஜாஹிர் ஹுசைன் பெற்றுக் கொண்டார்.

இத்திறப்பு விழாவிற்கு  வருகை தந்த அனைவரையும் கடையின் உரிமையாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி வரவேற்றார். மேலும் அவர் கூறுகையில், “இங்கு பெண்களுக்கான ஆடைகள், பேன்ஸி பொருட்  வகைகள், ஊத்துக்குளி நெய்,கைலிகள், எல்.ஈ.டி பல்பு வகைகள் கிடைக்கும்.  ஜெராக்ஸ் மற்றும் ஆன்லைன் மனுக்கள் அனைத்தும் சிறப்பாக எடுத்துக்கொடுக்கிறோம்” என கூறினார்.