Home செய்திகள் என்னம்மா இப்படி பன்றீங்களேமா! ஒரு நியாயம் வேனாமா!சின்னம், தேர்தல் வாக்குறுதி ம்ஹூம்.ஆனால் 5 தொகுதியில் போட்டி! பகீர் கிளப்பிய ஜெயலட்சுமி..

என்னம்மா இப்படி பன்றீங்களேமா! ஒரு நியாயம் வேனாமா!சின்னம், தேர்தல் வாக்குறுதி ம்ஹூம்.ஆனால் 5 தொகுதியில் போட்டி! பகீர் கிளப்பிய ஜெயலட்சுமி..

by Askar

தேனி, திருச்சி,கோவை உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும், சின்னம்,தேர்தல் வாக்குறுதிகள் -எதுவும் இல்லாமல் – மனு தாக்கல் செய்ய வந்துள்ளதாக மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை கிளப்பிய ஜெயலலிதா மகள்.? ஜெயலட்சுமி..

நெற்றியில் திலகம் ஜெயலலிதா போல் பச்சை நிற சேலை முழுக்கை சட்டையணிந்து அப்பாவி தனமாக அரசியல் களத்தில் குதித்த எம்ஜிஆர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் பிரேமா (எ) ஜெயலட்சுமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்றும் டி என் ஏ டெஸ்ட் என அனைத்திலும் அதிரடி காட்டுகிறார். தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில்  5 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைப்பேன் என கூறும் ஜெயலட்சுமி தேனி நாடாளுமன்ற தொகுதி பற்றிய கள விவரம் ,போட்டியாளர்கள் விபரம் தெரியாமல் களத்தில் உள்ளார் பாவம்.

கடந்த சில வாரங்களுக்கு முன், தான் ஜெயலலிதாவின் மகள் என பரபரப்பு கிளப்பிய பிரேமா (எ) ஜெயலட்சுமி என்பவர் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்திருந்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்காக மதுரை வந்துள்ளேன். திருச்சி, திருநெல்வேலி, சேலம், கோவைஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். வேறு எந்த அரசியல் கட்சிகள் ஆதரவும் இல்லை.

அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தேர்தலில் போட்டியிட வந்தேன்.

அது அம்மாவுக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டால் எப்போதும் வெற்றி பெறுவார். அதனால் சென்டிமென்டாக அங்கு போட்டியிடுகிறேன். தேனி தொகுதியில் வேறு யார் போட்டியிட்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை நான் போட்டியிடுகிறேன் அவ்வளவுதான். எனக்கு மக்கள் பலம் இருப்பதால் தான் போட்டியிடுகிறேன்.

அம்மா கொண்டு வந்த திட்டங்கள் தற்போது நடைபெறவில்லை. கட்சியும் நான்காக பிரிந்துள்ளது. அதனால் நான் வந்து மீண்டும் அம்மா செய்த திட்டங்களை செய்ய விரும்புகிறேன்.

நாங்கள் வெற்றி பெற போட்டியிடுகிறோம், யாரையும் தோற்கடிப்பதற்கில்லை.

அம்மா என்னை பார்த்துள்ளார்கள் ஆனால் ஏன் அதை வெளியில் சொல்லவில்லை என்று தெரியவில்லை.

தற்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அனுப்பி உள்ளோம் முடிவு வர காத்திருக்கிறோம் என கூறினார்.

அரசியலில் யாரையும் வரவிடவில்லை அதையும் மீறி நான் வந்துள்ளேன். அதிமுக கட்சியை ஒன்றிணைக்க தான் வந்துள்ளேன். இப்போதைக்கு மாநில கட்சியாக பதிவு செய்துள்ளோம் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!