Home செய்திகள் பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 5ம் ஆண்டாக நாட்டு பசுமாடு வழங்கும் சமூக ஆர்வலர்க்கு பொதுமக்கள் பாராட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 5ம் ஆண்டாக நாட்டு பசுமாடு வழங்கும் சமூக ஆர்வலர்க்கு பொதுமக்கள் பாராட்டு

by mohan

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் திருநாளையொட்டி நடைபெறுகிறது. இதில் சிறந்த மாடுபிடி வீரர்க்கும் சிறந்த காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற சிறந்த காளைக்கு பரிசாக நாட்டு பசு இனங்களை பாதுகாக்கும் நோக்கில் நாட்டுபசுமாடு கன்று குட்டியுடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஆண்டுதோறும் அலங்காநல்லூரைச் சேர்ந்த பொன் குமார் என்பவர் வழங்கி வருகிறார். இந்தாண்டு பரிசினை வழங்க அனுமதி அளித்த பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகளுக்கு நன்றி கூறினார். மேலும் நாட்டு பசு மாட்டினங்களை பாதுகாக்க பல்வேறு சமூக ஆர்வலர்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் தயாராக உள்ளதாக தகவல் தெரிவித்தார். மேலும் நாட்டு இன மாடுகளை பாதுகாக்கும் விதமாக செயல்படும் இவரின் இந்த செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com