Home செய்திகள்உலக செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமையாக்களின் பேரரசு-3 (கி.பி.661-750)*

கப்பல் சிரியாவின் டமாஸ்கஸை நோக்கி சீரான வேகத்தில் ஓடத் துவங்கியது.

ரோமாபுரி பேரரசின் அமைச்சரும் அவரின் பாதுகாவலர்களும் திகைத்துப் போயினர்.

கடற்கரையிலிருந்த அமைச்சரின் பாதுகாப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரோமப்பேரரசின் அமைச்சர்கள் மிகுந்த ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

ரோம சக்கரவர்த்தி ஏராளமான வரிகளை குடிமக்கள் மீது விதித்து இருந்தார். அமைச்சர்களுக்கு பெரிய மாளிகைகள், பாதுகாப்பு வீரர்கள் என ஏராளமான சலுகைகள் இருந்தன.

அமைச்சர்களும் ஊழலில் திளைத்து போய் இருந்தனர். இவர்களை போப் அவர்கள் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்று சூழலில்,

தங்களை வெல்லவே முடியாது மக்கள் அனைவரும் தங்களின் அடிமைகள் என்று மிகுந்த செருக்குடன் இருந்தனர்.

இந்த நிலையில் தான் தங்கள் கண்ணெதிரே அமைச்சரின் கடத்தல் நடந்ததை அவர்களால் நம்பமுடியவில்லை.

சக்கரவர்த்திக்கு செய்தி பறந்தது. சக்கரவர்த்தி கொதித்து போனார். அமைச்சரை மீட்க கப்பல்படையை உடனடியாக அனுப்பினார்.

அமைச்சரை அழைத்துவந்த கப்பலிலிருந்த முஸ்லீம் வீரர்கள், அமைச்சரை பாதுகாப்பாக ஆனாலும் சுதந்திரமாக கப்பலில் உலவ விட்டனர்.

ரோமவீரர்களின் மது அருந்துதல் ,நடனம், விபச்சாரம் போன்ற பொழுது போக்குகளை அதுவரை படைப்பிரிவுகளில் பார்த்து வந்த ரோம அமைச்சருக்கு,

முஸ்லீம் வீரர்களின் கட்டுப்பாடுகளும், ஒழுக்கங்களும், ஐந்துநேரம் இறைவனை தொழும் தொழுகைகளும், மனதை கவர்ந்தன.

ரோம பேரரசின் அமைச்சர், கலீபா முஆவியா (ரலி) அவர்கள் முன்பு அழைத்து வரப்பட்டார்

அவருக்கு ஓய்வும், நல்ல தங்குமிடமும் சுவையான உணவுகளும், சரியான உடையும், கலீபாவின் உத்தரவுப்படி வழங்கப்பட்டு இருந்தது.

கலீபாவின் சபைக்கு அந்த அமைச்சரிடம் அடிவாங்கிய நபித்தோழர் அழைத்து வரப்பட்டார்.

அவரிடம் உங்களை எந்த அளவு அமைச்சர் அடித்தாரோ அதே அளவு அமைச்சரை அடிக்க கலீபா உத்தரவிட்டார்கள்.

கலீபா அவர்கள் தனது மக்களிடமும், அவரிடம் பணிபுரியும் ஊழியர்களிடத்திலும் வைத்திருந்த பிரியத்தையும் நம்பிக்கையையும் பார்த்து வியப்புற்ற தோழர் அமைச்சரை மன்னித்து விடுவதாக அறிவித்தார்.

கலீபா முஆவியா (ரலி) அவர்கள் தனது வீரருக்காக எடுத்த முயற்சியையும், கப்பலில் வரும்போது,

முஸ்லீம் வீரர்களின் நடத்தையையும், நேரில் பார்த்து ஆச்சரியமடைந்த அந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் அமைச்சர், தன்னிடம் அடிவாங்கிய தோழர் தன்னை மன்னிப்பதாக கூறியதும்,

இந்த அழகிய நடைமுறைகளை இதயத்தில் ஏற்று அவர் முஸ்லீமாக மாறினார்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com