Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -7

(கி.பி.1299-1922)

உலகத்திலேயே பலமான படைப்பிரிவாக உருவான “எனிச்சாரி” படைப்பிரிவு மன்னரின் ஆணைகளையே புறம் தள்ளியது. எனவே அந்தப்பிரிவு சிறிது சிறிதாக கலைக்கப்பட்டது.

மன்னரை மக்கள் சந்திக்க விடாமல் இந்த படைப்பிரிவு, மன்னரை தனிமைப்படுத்தியது.

உர்கானின் ஆட்சியில் பொதுவாக நாடு அமைதியாக இருந்தது. ஏராளமான கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டன.

உஸ்மானியர்களின் தலைநகராக புருஷா நகரே இதுவரை இருக்கிறது.

உஸ்மானிய படைகள் சவுதி அரேபியா, ஐரோப்பா, துருக்கியின் காண்ஸ்டாண்டி நோபிள் என படையெடுத்து செல்வதற்கு அணிவகுத்து தயாராக நின்றன.

உர்கான் அவர்களின் மூத்த மகனும் பட்டத்து இளவரசருமான சுலைமான் வேட்டைக்கு காட்டிற்கு சென்றார்.

துறத்திவந்த புலியை எதிர்த்து அடித்து கொன்றுவிட்டு குதிரையில் ஏறும்போது தவறி விழுந்தார்.

அதில் தலையில் பலமான அடிபட்டது. உடனடியாக மாளிகைக்கு தூக்கி வந்து மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை செய்தும் இறுதியில் மரணமடைந்தார்.

85 வயதான மன்னர் உர்கான்‌ மகனின் மரண அதிர்ச்சியை தாங்கமுடியாமல் சிறிது நாட்களில் அவரும் மரணமடைந்தார்.

உர்கானின் ஆட்சிக்காலத்தில் சாலைகள் அமைக்கப் பட்டன.மரங்கள் சாலையின் இருபுறங்களிலும் நடப்பட்டன. ஏராளமான மஸ்ஜிதுகள் கட்டப்பட்டன. தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன

4000 பொது கழிவறைகளும், குளியலறைகளும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கட்டப்பட்டன.

உர்கானின் காலத்தில் “இப்னுபதூதா “என்ற பயண ஆய்வாளர் உஸ்மானிய ஆட்சியைப்பற்றி நிறைய குறிப்புகளை பதிவு செய்துள்ளார்.

உடனடியாக உர்கானின் மகன் முராத் மன்னராக பதவியேற்றார்.

முராத் பதவியேற்றவுடன் கராமான் பிரதேசத்தின் சிற்றரசர் அலாவுதீன், வயதில் சிறியவரும் போர் அனுபவங்கள் இல்லாத முராத் மன்னராக பதவி ஏற்றுள்ளதால் எளிதாக தோற்கடித்து விடலாம் என்று எண்ணி போர் தொடுத்தார்.

உஸ்மானிய படைகள் கராமான் படைகளை பந்தாடியது.தப்பிய சிற்றரசர் அலாவுதீன் சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தார்.அத்தோடு மன்னர் முராத்திற்கு தனது பேரழிகியான மகளை திருமணம் செய்து கொடுக்க ஒப்புக்கொண்டனர். இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

உஸ்மானிய பேரரசின் மன்னர்களில் அடுத்தடுத்த வந்தவர்கள் மேம்பட்ட செயல்பாடு உடையவர்களாகவே இருந்தனர்.

முராத் அவர்களின் அரசாங்கத்தில் ராணுவத்தளபதியாக கலீல் என்பவர் சிறப்பாக பணியாற்றினார்.

கலீல் அவர்கள் மிகவும் நீதியானவராகவும், இறைபக்தி மிக்கவராகவும் இருந்தார்.

ஆகவே மன்னர் முராத் அவர்கள் கலீல் அவர்களை முதன்மை முதல் அமைச்சராக நியமித்தார்.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் பால்கான் நாடுகளை நோக்கி உஸ்மானிய படைகள் நகரத் துவங்கின.

ஐரோப்பாவின் முக்கிய நகரமான எத்திரன் சுற்றி வளைக்கப்பட்டது. அதனால் ஏராளமான திருப்பங்கள் ஏற்பட்டது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!