Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -22

( கி.பி 1299-1922)

சுல்தான் இரண்டாம் முராத் அவர்கள் தனது மகனுக்கு முகம்மது என்று பெயரிட்டார்.

தனது மகனை வளர்த்து பராமரிக்கும் பொறுப்பை “சேக் அல்‌ சம்சுதீன்”என்ற அறிஞர் இடம் ஒப்படைத்தார்.

இவர் முகம்மதுவுக்கு அல்குர்ஆன், அல் ஹதீஸ், இஸ்லாமிய சட்டக்கலை, விளையாட்டு, கணிதவியல், விண்ணியல், போர் தந்திரங்கள், வரலாறு என அனைத்து துறைகளையும் போதித்தார்.

அரபு,பாரசீகம், துருக்கி, லத்தீன், மற்றும் கிரேக்க மொழிகளையும் முகம்மது கற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.

முகம்மது அவர்கள் இயற்கையிலேயே அன்பு,பணிவு, மார்க்கப் பற்று போன்ற நல்ல குணங்களை உடையவராக இருந்தார்.

கவித்துவ புலமையும் பெற்றிருந்தார். வாள் பயிற்சி, குதிரையேற்றம், போர்நுணுக்கங்கள் போன்ற போருக்கான பயிற்சிகளையும் கற்றிருந்தார். சிறுவயது முதலே தனது தந்தையுடன் போர்களிலும் பங்கு பெற்றார்.

முன்னர் இரண்டாம் முராத் 12 வயதே நிரம்பிய தனது மகன் முகம்மதை உஸ்மானிய பேரரசின் மன்னராக அறிவித்துவிட்டு அவர் ஓய்வெடுக்க சென்று விட்டார்.

இந்த சூழலில் மன்னர் சிறுவராக இருந்ததை அறிந்த ரோம பேரரசு உஸ்மானியர்களோடு போருக்கு படை எடுத்து‌ வந்தது.

சிறுவயது மற்றும் போதிய அனுபவம் இல்லாத முகம்மது, தனது தந்தையை மீண்டும் வந்து பொறுப்பேற்று போரை நடத்த செய்தி அனுப்பினார்.

இரண்டாம் முராத் அவர்கள் இப்போது நீதான் மன்னர் நீயே போரை நடத்து நான் வரமுடியாது என பதில் கடிதம் அனுப்பினார்.

ஆனால் புத்திசாலித்தனமாக மன்னர் முகம்மது அவர்கள் தனது தந்தைக்கு மீண்டும் மன்னர் முகம்மது கட்டளையிடுகிறேன் வந்து போரை நடத்துங்கள் என கடிதம் எழுதினார்.

மறுக்க முடியாமல் மீண்டும் பொறுப்பேற்று ரோமப்படைகளை இரண்டாம் முராத் அவர்கள் தோற்கடித்தார்.

போர் வெற்றிக்குப் பிறகு தனது தந்தை இரண்டாம் முராத் அவர்களை மன்னராக மீண்டும் பொறுப்பேற்க வைத்தார் முகம்மது அவர்கள்.

சிறிது காலத்தில் இரண்டாம் முராத் அவர்கள் மரணமடைந்தார்.

பிறகு உஸ்மானிய பேரரசின் மன்னராக தனது 18 வயதில் மீண்டும் முகம்மது பொறுப்பேற்றார்.

உலகின் சிறந்த பத்து மன்னர்களில் ஒருவராக பேரரசர் முகம்மது போற்றப்படுகிறார்.

இந்த முறை காண்ஸ்டாண்டி நோபிள் நகரை வென்று முழு துருக்கியையும் கையகப்படுத்தி உஸ்மானிய பேரரசை உலகின் முதல் நிலை பேரரசராக கட்டமைக்க திட்டமிட்டார்.

போருக்கான ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. போருக்கு பெரும் படை திரட்டப்பட்டது.

கடலில் போர் கப்பல்களை ஓடவிட்டு ரோமானிய கப்பல்களை சுற்றி வளைத்தார்.

ரோமானிய கடல்படையை ஊடுறுவ இவர் வகுத்த திட்டம் இன்றளவும் ஆச்சரியமானது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!