Home செய்திகள்மாநில செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உதுமானிய பேரரசு -13

( கி.பி 1299-1922)

இன்றைய உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஷாரிசப்ஸ் என்ற ஊரில் முஸ்லீமாக பிறந்தார் தைமூர்.

தனது பிறந்த ஊரை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சுஜாவுதீன் தைமூர் பிறகு ஆசியாவின் பல பகுதிகளை கைப்பற்றினார்.

தனது படைகளை மிக வலிமையாக கட்டமைத்தார். அவரின் படைவீரர்களுக்கு நாள்தோறும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கந்து நகரம் தைமூரின் தலைநகரமாக இருந்தது.

சாமர்கந்து நகரம் மிகப்பெரிய வணிக நகரமாகவும் இருந்தது. கோட்டைகள் பாதுகாப்புடன் திகழ்ந்தன.

கொள்ளையர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அதனால் வணிகர்கள் பயமின்றி வணிகத்தில் ஈடுபட்டனர்.

அதனால் வணிகர்கள் தைமூரின் ராணுவத்திற்கு நிறைய பொருள்களை கொடுத்தனர்.

ஆகவே தைமூரின் ராணுவத்திற்கு சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. நல்ல ஆயுதங்களும் தயாரித்து வழங்கப்பட்டன.

உஸ்மானிய பேரரசர் பயாசித்திடம் தோல்வி அடைந்த மத்திய ஆசியாவில் இருந்த நிறைய சிற்றரசர்கள் தைமூரிடம் சரணடைந்தனர்.

தங்கள் நாடுகளை பயாசித்திடமிருந்து மீட்டுத்தர கோரிக்கை வைத்தனர்.

இவரின் வீரர்கள் இயல்பிலேயே முரட்டுத்தனமான குணம் கொண்டவர்களாக இருந்தனர்.

தைமூரின் படைகள் ரஷ்ய பகுதிகளை கைப்பற்றியது. மேலும் மத்திய ஆசியாவின் பல பகுதிகளை கைப்பற்றியது.

தைமூர் மங்கோலிய மற்றும் துருக்கிய வழித்தோன்றல் என்று கூறப்படுகிறது.

தைமூரின் தாய் செங்கிஸ்கான் வழிவந்தவர் என்றும் ஆகவே இவரிடமும் அதே முரட்டு குணங்கள் குடியிருந்ததாக கூறுகிறார்கள்.

தைமூர் கோபத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் பல தாறுமாறான உத்திரவுகளை இடுவார்.

ஆகவே அவரின் படைத்தலைவர்களே யாரும் தைமூர் கோபமாக இருக்கும் போது எதிரில் போகமாட்டார்கள்.

ஆனால் சாதாரணமாக ஒரு‌‌ குழந்தையைப் போல சாந்தமாகவும் இருப்பார்.

இப்படி வித்தியாசமான குணம் கொண்ட தைமூரிடம் ஆசியப்பகுதிகளில் தங்கள் நாடுகளை உஸ்மானிய பேரரசிடம் இழந்த சிற்றரசர்கள் தங்கள் நாடுகளை மீட்டுத்தரச் சொல்லி கோரிக்கை வைத்தனர்.

தைமூர் யோசித்தார். முஸ்லீம்களின் உஸ்மானிய சாம்ராஜ்யம் ஐரோப்பா மற்றும் பால்கன் நாடுகளில் பரவுவதை அறிந்தார்.

உஸ்மானிய பேரரசர் பயாசித்திற்கு தைமூர் கடிதம் ஒன்றை எழுதினார். கடிதத்தின் முதல் வரியை படித்த பயாசித் அதிசயித்து போனார்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!