Home செய்திகள்மாநில செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -28

(கி.பி 1299-1922)

உஸ்மானிய பேரரசர் இரண்டாம் பயாஸித் அவர்கள் அரசவையிலேயே நடக்க முடியாமல் கீழே சரிந்தார். அரண்மனையே நிலைகுலைந்து போனது.

பேரரசர் இரண்டாம் பயாஸித் அவர்களுக்கு திடீரென இடுப்பிலிருந்து கீழ்பகுதிகள் வேலை செய்யாமல் போனது.

உடனடியாக அரசாங்க மருத்துவர்களும், நரம்பு சிறப்பு மருத்துவர்களும், வரவழைக்கப்பட்டனர்

மன்னருக்கு பக்கவாத நோய் தாக்கி இருப்பதாக அறிந்து அதற்கு பலவவகையான மருந்துகளை உள்ளே குடிக்க வைத்தும் மேலே பூசியும் மருத்துவம் பார்த்தனர்.

இருப்பினும் எந்த மருந்துகளும் பயனளிக்கவில்லை .திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கி.பி 1512 ஆம்ஆண்டு மரணமடைந்தார்.

அவருக்கு பிறகு சுல்தான் சலீம் மன்னராக பொறுப்பேற்றார். ஏமன் மற்றும் சில அரபுநாடுகளை உஸ்மானிய பேரரசோடு இணைத்தார்.

எகிப்தில் பிரச்சினை ஏற்பட்டபோது நேரிடையாக போய் எகிப்தை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அங்கு தங்கி ஏராளமான புனித தலங்களை புணரமைத்தார்.

எகிப்தில் இருந்த அப்பாஸிய மன்னரின் வாரிசை துருக்கிக்கு அழைத்து வந்து ஹேஜியா சோபியா மசூதிக்கு அழைத்து வந்தார்.

அங்கு ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அப்பாஸிய மன்னரின் வாரிசான முதவ்கல் அலல்லா அவர்கள், அதுவரை கட்டிக்காத்து வந்த அப்பாஸிய கொடி, பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் போர்வை, அப்பாஸிய மன்னர்கள் பயன்படுத்திய வாள்கள் எல்லாம் சுல்தான் சலீம் இடம் ஒப்படைத்தார்.

இது உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்து உஸ்மானிய பேரரசை இஸ்லாமிய கிலாபத்தாக ஏற்றுக்கொண்ட அடையாளமாக பார்க்கப்பட்டது.

சுல்தான் சலீம் அவர்கள் மக்கமாநகரை அழகுபடுத்தினார். கஃபா ஆலயத்திற்கான போர்வை துருக்கியில் இருந்தே சென்றது. சுல்தான் சலீமே அதனை நேரிடையாக மக்காவிற்கு எடுத்து சென்றார்.

மதினாநகரையும் அழகுபடுத்தினார். சுல்தான் சலீமிற்கு இரண்டு ஹரம்களின் ஊழியர் என்று பொருள்படும் ஹாத்திமுல் ஹரமைன் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இதனாலேயே நீண்ட நாட்களாக துருக்கியின் கலீபாவே கஃபாவிற்கான போர்வை எடுத்து சென்றும் போர்த்தும் பழக்கம் இருந்தது.

பின்னால் வந்த உஸ்மானிய பேரரசர்களுக்கும் இந்தப்பட்டம் தொடர்ந்தது.

இதனால் இஸ்லாமிய உலகின் கலீபாக்கள் என்றே உஸ்மானிய பேரரசர்கள் அழைக்கப்பட்டனர். வரலாறும் அதையே பதிவு செய்து இருக்கிறது.

உலக முஸ்லீம்களின் தலைமையிடமாக துருக்கியும் அதன் தலைவராக உஸ்மானிய பேரரசரும் அறிவிக்கப்பட்டதால் ஐரோப்பிய உலகம் அதிர்ந்து போனது.

ஐரோப்பிய கடற் கொள்ளையர்கள் முஸ்லீம்களின் பொருட்களை சூறையாடியதோடு கொலையும் செய்தனர்.

சுல்தான் சலீம் கடற் கொள்ளையர்களை அடக்க கவனம் செலுத்தினார். நாட்டில் சியா,சுன்னி களின் பிரிவுகளும் பிரச்சினைகளும் அதிகரித்தது.

ஈரானில் சியாக்களின் அரசாங்கம் நிறுவப்பட்டு உஸ்மானியர்களோடு சண்டையில் ஈடுபட்டனர்.

துருக்கியின் மேற்குப் பகுதியில் ஐரோப்பியர்களோடு சண்டை, கிழக்கு பகுதியில் ஈரானோடு சண்டை ,என‌ துருக்கி அமைதியிழந்து இருந்தது.

இதனை சாக்காக பயன்படுத்திய ஐரோப்பிய நாடுகள் செய்த செயல்கள் துருக்கியை ஆட்டம் காண செய்தன.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!