Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -23

(கி.பி 1299-1922)

உஸ்மானிய பேரரசர்
முகம்மது காண்ஸ்டாண்டி நோபிள் நகரை கைப்பற்றி முழு துருக்கியையும்
கைப்பற்றி காண்ஸ்டாண்டி
நோபிள் நகரை தலைநகராக ஆக்கவும் திட்டம் தீட்டினார்.

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் சுபச் செய்தி சொன்ன காண்ஸ்டாண்டி
நோபிள் நகரை வெற்றிகொண்ட
தளபதியாகவும்,
தன்னுடைய வீரர்கள் அதன் வெற்றி வீரர்களாகவும், ஆகவும் இறைவனின் அருள் பெற்றவர்களாக ஆகவும் ஆசை கொண்டார்.

தனது 2,65,000 வீரர்களை கொண்ட படைமுன்பு வீரத்துடன் உரையாற்றி காண்ஸ்டாண்டி
நோபிள் நகரை வெற்றி கொண்டு இறைவனின் அருளையும், புதிய வரலாற்றையும், படைக்க வேண்டும் என்றார்.

நகரை நோக்கி தரைப்படை வீரர்கள் முன்னேறினர்.
உஸ்மானிய கப்பல் படை துருக்கிய கப்பல்களின் அணிவகுப்பால் உள்ளே நுழைய முடியவில்லை.

கப்பல்களை ஒன்றிணைத்து, பெரும் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு,
கடல் பகுதிகளுக்குள்
நுழைய முடியாமல் பாதுகாப்பை பலமாக துருக்கிய கப்பல்படை செய்து இருந்தது.

முகம்மது தனது கப்பல்களை தனது தரைப்படை வரும் திசைக்கு நேர் பின்புறமாக மதில் சுவரை ஒட்டி கொண்டு வரச்செய்தார்.

துருக்கிய கப்பல்களின் பாதுகாப்பு கடற்கரையை சுற்றிய பகுதிகளில் மட்டுமே இருந்தது.

முகம்மது தனது கப்பல்படை
படையை பின்புறமாக கொண்டு சென்று நிறுத்திக் கொண்டார்.

அது கடல் பிறை போல வெளிப்புறமாக. வளைந்து இருந்ததால், அந்தப்பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை சட்டென யாரும் பார்க்க முடியாது.
ஆகவே உஸ்மானிய கடற்படை அந்த இடத்தை சரியாக தேர்ந்தெடுத்தது.

அந்தப்பகுதியில் அலைகளின் சீற்றங்கள் மிக அதிகமாகவும், கடல் மிக ஆழமாகவும் இருந்ததால், அந்தப்
பகுதியிலிருந்து
எதிரிகள் உள்நுழைய
முடியாது என்று துருக்கிய மன்னர் நினைத்ததால் அந்தப்பகுதியில் பாதுகாப்பே இல்லை.

இதனை ஒற்றர்கள் மூலம் அறிந்த மன்னர் முஹம்மது சரியாக அந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்.

கடல் ஆழமாக இருந்ததால் பெரிய கப்பல்களை முடிந்தளவு கரை அருகில் தளபதிகள் கொண்டுவந்தனர்.

கப்பலிலிருந்து கரைக்கு ஐம்பது வீரர்களும், படையுடன் வந்த மர தச்சர்களும்
படகுகளில் சென்று கரை இறங்கினர்.

அவர்கள் கடற்கரை ஓரம் பழுது பட்டு நின்ற துருக்கிய கப்பல்களையும்
படகுகளையும்
ஒன்றிணைத்து பெரியபாலமாக‌ உருவாக்கினர்.

சில படகுகளை பலகைகளாக உடைத்து அதில் கொழுப்புகளை தடவினார்கள்.

முன்னேற்பாடுகள் முடிந்ததும், தொலைவில் நின்ற கப்பல்களுக்கு சமிஞ்சை செய்ததும்
அதிலிருந்த வீரர்களும், மற்றும் பொருள்களும், மளமளவென கரைக்கு வந்தன.

கொழுப்பு தடவப்பட்ட
பலகைகள் மேல் சிறிய படகுகளில் பொருட்களை ஏற்றி,
கரைக்கு எளிதாக இழுத்து வந்து சேர்த்தனர்.

மதிலின் கிழக்குப்பகுதியில் நடந்த எந்த நிகழ்வுகளையும் துருக்கிய வீரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அன்றைய இரவில்
விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால், இந்த கடல் படை பெரும்பூதம் போல்
கடற்கரையில் இருந்தது.

பின்புற மதில் சுவரின் ஒரு வளைவான பகுதியை தேர்ந்தெடுத்து அதில் சில வீரர்கள் உள்நுழைய துவாரம் போடப்பட்டது.

உஸ்மானிய கடற்படை வீரர்கள் சிலர் சத்தமில்லாமல் கோட்டைக்குள் புகுந்தனர்.

அப்போது திடீரென கோட்டைக்குள் விளக்குகள் எரிந்தன.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!