Home செய்திகள்மாநில செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -3

( கி.பி 1299-1922)

மங்கோலிய படைவீரர்கள் கொடூரமான வர்களாக இருந்தார்கள்.

மங்கோலிய படைகள் புகும் எல்லா நாடுகளும் நாசப்படுத்தபட்டன. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

முதியவர்கள், குழந்தைகள் என எந்த இரக்கமும் இல்லாமல் மக்களை கொன்று குவித்துவிடுவார்கள்.

சொத்துக்களை தீ‌வைத்து கொளுத்திவிடுவர். இதுபோன்ற கொடுமைகளை செய்துவிட்டு அந்த பகுதியில் எந்த நிர்வாகமோ, ஆட்சிகளோ அமைக்காமல் விட்டு விட்டு அடுத்த பிரதேசத்திற்கு நகர்ந்து விடுவர்.

மங்கோலிய படைகள், ஓடுகிற மக்களை துறத்தி துறத்தி கொல்வார்கள். மக்கள் தங்கம்,மற்றும் விலை உயர்ந்த பொருள்களை,

தங்கள் வாய்களிலும் உடலின் பாகங்களிலும் மறைத்து எடுத்துக்கொண்டு அடுத்த பிரதேசத்திற்கு ஓடும்போது,

அவர்களை வழிமறித்து அவர்களின் குடலை உறுவி,உறுப்புகளை அறுத்து தங்கம் மற்றும் பொருட்களை கைப்பற்றுவார்கள்.

ஆகவே மங்கோலியர்கள் என்ற தாத்தாரியர்களை கண்டு மத்திய ஆசியாவே நடுங்கியது.

ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் அச்சத்தால் ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்த்தன.

இதுபோன்ற மத்திய ஆசிய நாடுகளில் ஏற்பட்ட வெற்றிடங்களால் ஐரோப்பிய நாடுகள் மகிழ்ச்சி அடைந்தன.

இந்த சூழலில் செல்ஜூக்கிய கவர்னராக இருந்த உஸ்மான் அவர்கள் அருகிலுள்ள எல்லா நாடுகளின் மன்னர்களுடனும் பேசி தன்னோடு இணைத்துக் கொண்டார்.

கட்டுப்படாத முரண்டு பிடித்த சிற்றரசுகளை படைகளை அனுப்பி தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். மக்கள் உஸ்மான் அவர்களை மிகவும் நேசித்தனர்.

உஸ்மான் தன்னை மன்னராக கி.பி 1300 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவரின் பெயராலேயே “உஸ்மானிய பேரரசு” என்று அழைக்கப்படுகிறது.

இந்த சூழலில் மங்கோலிய படைகளை சூழ்ந்துகொண்ட உஸ்மானிய வீரர்கள், முரட்டுத்தனமான மங்கோலிய வீரர்களை தங்கள் புத்தசாலித்தனமாக வியூகங்களால் திணறடித்தனர்.

உஸ்மானின் நண்பரும் கவிஞருமான அஹமது புதிய ஆயுதங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்.

அவர் வடிவமைத்த நெருப்பு பொறிகளை உமிழும் ஆயுதவண்டிகள் சிறப்பாக பயன்பட்டன.

மங்கோலிய படைகளை சூழ்ந்த உஸ்மானிய வீரர்கள், எதிர்த்து வந்த மங்கோலியப் படையை எதிர்கொள்ள, தங்கள் படையை இரண்டாக பிரித்து வலது பக்கமும் இடதுபக்கமுமாக நகர்ந்தனர்.

உஸ்மானிய படையின் ஒரு பிரிவு பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது. இந்த இரண்டு படைப்பிரிவுக்கும் இடையில் நுழைந்த மங்கோலியப்படை,

பின்னால் நகர்ந்த உஸ்மானிய படையை நேரடியாக துறத்தி முன்னேறியது.

பக்கவாட்டில் இருபுறமும் நகர்ந்த உஸ்மானிய படையில் இருந்து புதியதாக வடிவமைக்கப்பட்ட ஆயுதவண்டிகளில் இருந்து திடீரென வீசப்பட்ட நெருப்பு பொறிகளால் மங்கோலிய படை திணறியது.

இறுதியில் வெப்பத்தை தாங்க முடியாமல் கிடைத்த இடங்களில் புகுந்து மங்கோலிய படைகள் சிதறி ஓடியது.

மங்கோலியப்படை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.

மன்னர் உஸ்மானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணப்படுக்கையில் வீழ்ந்தபோது மக்கள் அழுது புரண்டனர்.

கட்டமைக்கப்பட்ட பேரரசின் நிலை என்ன ஆனது..?

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!