Home செய்திகள்மாநில செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு-6

(கி.பி 750- 1258)

மன்னர் ஹாரூன் அர்ரஷீத் அவர்கள் அழுகுரல் வந்த அந்த வீட்டின் கதவை தட்டிவிட்டு அனுமதி கிடைத்தவுடன் உள்ளே நுழைந்தார்கள்.

வீட்டினில் இருந்த அந்த மூதாட்டி உள்ளே வந்து நிற்பவரை யாரெனத் தெரியாமல்,தனது கவலையை எடுத்துரைத்தார்.

தனது பாரம்பரியமான வீட்டின் பெரிய பகுதியை தனது ஒப்புதல் இல்லாமல் அருகிலிருக்கும் பள்ளிவாசலோடு கவர்னர் இணைத்து விட்டார்.

அதை கேட்டால் மிரட்டுகிறார்கள் என்பதை நினைத்து அழுகிறேன் என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து மன்னர் ஹாரூன் அர்ரஷீத் அவர்கள் மிக நேர்மையானவர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் அவரிடம் நாளை நேரில் சென்று முறையிடுவேன் என்றுகூற,

உடனடியாக பாதுஷா அவர்கள் நீதிசெலுத்த இறைவன் பாதுஷாவையே உங்கள் வீட்டிற்கு அனுப்பி விட்டான்.

உடனடியாக நாளை உங்கள் வீட்டின் பகுதி பழையபடி எப்படி இருந்ததோ அப்படி கட்டி இணைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

வந்தது பாதுஷா என்று அறிந்த மூதாட்டி வாயடைத்து போனார்.

உடனடியாக அரசவைக்கு அழைக்கப்பட்ட கவர்னரை பாதுஷா கண்டித்து அவரின் செலவிலேயே மூதாட்டியின் வீட்டை கட்டிக் கொடுக்க உத்தரவிட்டார்.

மன்னர் அல்-மஹதியின் மூன்றாவது மகனாகவும், ஏமன்‌ நாட்டைச்சேர்ந்த மனைவி அல் கைசுரானின் இரண்டாவது மகனாகவும் பிறந்தார் ஹாரூன் அர்ரஷீத் அவர்கள்.

அவரின் 15 ஆவது வயதிலேயே துனிசியா, சிரியா, ஆர்மீனியா, அஜர்பைஜான் பகுதிகளின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அவரின் வழிகாட்டியாக அவரின் ஆசிரியர் யஹ்யா பின் காலித் இருந்து வழிநடத்தினார். மன்னர் அவரை தந்தை என்று அழைக்கும் அளவிற்கு அவர்களின் உறவு இருந்தது.

ஹாரூன் அர்ரஷீத் அவர்கள் ஒன்பது முறை ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் ஏராளமான அறிஞர்களை ஹஜ்ஜிற்கு அழைத்துச்சென்றார்.

ஹாரூன் அர்ரஷீத் அவர்கள் ஜுபைதா என்ற பேரழகியை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் மிக ஆடம்பரமாக நடந்ததாகவும் அதற்காக 50 மில்லியன் திர்ஹம்கள் செலவிடப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

அரண்மனை ஆடம்பரஙகள் இருக்கவே செய்தன. இருவரும் மிகுந்த இறைபக்தி உடையவர்களாக இருந்தார்கள்.

மக்காவில் ஒருமுறை மிகுந்த வறட்சி ஏற்பட்டு குடிப்பதற்கே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.

அப்போது பேரரசி சுபைதா அவர்கள், பாக்தாத்தில் இருந்து மக்காவிற்கு வாய்க்கால் வெட்டி யூப்ரடீஸ் நதியிலிருந்து தண்ணீரை மக்கா‌‌ நகருக்கு வழங்கினார்கள். இதற்கான முழுச் செலவையும் தனது நகைகளையும், தனது சொந்த செல்வங்களையும் விற்று வழங்கினார்கள். இன்றளவும் அதன் சுவடுகள் காட்சி அளிக்கின்றன.

ஏராளமான நாட்டுப்புற கதையாடாடல்கள் ஆயிரத்து ஒரு இரவுகள் போன்ற கதைகளின் நாயகராக ஹாரூன் அர்ரஷீத் பாதுஷா இருந்தார்கள்.

23 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய பாதுஷா அவர்கள் , தனது அரசை தனது அன்பிற்குரிய மனைவி ஜுபைதா அவர்களின் இரண்டாவது மகன் அல் அமீனுக்கும், மற்றொரு மனைவியின் மகனான அல்- மாஃமூனுக்கு என இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொடுத்தார்கள்.

இருப்பினும் பாதுஷாவின் மூன்று மகன்களையும் அடுத்தடுத்த கலீபாக்களாக‌ ஒரு உத்தரவை எழுதி அதனை கஃபா ஆலயத்தில் தொங்கவிடச் செய்தார்கள்.

அதற்கான காரணங்களை தொடர்ந்து ஆராய்வோம்..!

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!