Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு -24

(கி.பி 750-1258)

“அல்லாஹ்வின் அடிமையும், முஃமீன்களின் கலீபாவுமாகிய உமரிடமிருந்து, ஜெருசலேம் நகரவாசிகளின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும், இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு அளிக்கிறது.

அவர்களுடைய தேவாலயங்களும், சிலுவைகளும் பாதுகாக்கப்படும். அவரவர்களின் வழிபாட்டு தலங்களில் அவரவர் வழிபாடு செய்து கொள்ளலாம்.

அவைகள் முஸ்லீம்களின் அதிகாரத்திற்கு உட்படுத்தவோ, உடைக்கப்படவோ மாட்டாது.” என்ற வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார்கள்.

நகரங்களின் கதவுகள் திறக்கப்பட்டு , உமர்(ரலி) அவர்கள் நேராக மஸ்ஜிதுல் அக்ஸா சென்று அங்கு தாவூத் (அலை) அவர்களின் வளைவுக்கு (David Arch)கீழே தொழுதார்கள்.

பிறகு அங்கிருந்த மிகப்பெரிய தேவாலயத்திற்கு சென்றார்கள்.

அங்கு லுஹர் தொழுகை நேரம் வர,பாதிரிகள் தேவாலயத்தின் உள்ளே தொழ சொன்னபோது,

இப்போது நான் இங்கு தொழுதுவிட்டால், பிற்காலத்தில் வருபவர்கள் இது எங்கள் கலீபா தொழுத இடம் என்று உரிமை கொண்டாடினால்,

அது பிரச்சினைகளை உருவாக்கும் என்று அவர்களின் அன்பை மறுத்துவிட்டு தேவலாயத்தின் படிக்கட்டில் நின்று தொழுதார்கள்.

பிறகு தலைமை பாதிரியாரிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார்கள். அதில் எழுதப்பட்டு இருந்த செய்தி இன்றைய உலகிற்கான மத ஒருமைப்பாட்டிற்கான சாசனமாகும்.

அதில் இந்தப்படிக்கட்டுகள் “அதான்” (பாங்கு) சொல்லும் இடமாகவோ, கூட்டுத் தொழுகை நடக்கும் இடமாகவோ ஒரு போதும் இருக்கக்கூடாது என்று எழுதப்பட்டு இருந்தது.

ஜெருசலத்தில் ஒருபள்ளிவாசலை கட்ட கிறிஸ்தவ பிஷப்பிடம் உமர் (ரலி) அவர்கள் இடம் கேட்டார்கள்.

யாகூப் நபியுடன் அல்லாஹ் பேசிய இடமான “சக்ரா” என்ற கற்பாறை இருந்த இடத்தை காட்டினார்கள்.

யூதர்களை இழிவுபடுத்தும் நோக்கில் அந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் குப்பைகளை கொட்டி குப்பை மேடாக ஆக்கி இருந்தார்கள்.

அந்த இடத்தை எல்லோருடன் சேர்ந்து உமர்(ரலி) அவர்களும் சுத்தம் செய்தபோது கிறித்தவ உலகமே இஸ்லாமிய சமத்துவத்தை கண்டு வியந்து போனது.

இதுபோன்ற பாலஸ்தீனப் பகுதிகளில், ஜெருசலத்தில் கொடுக்கப்பட்ட மத சுதந்திரங்கள் சமத்துவ ஆட்சி முறைகளால் அந்தப்பகுதி மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

பின்னர் வந்த ஆட்சிகளில் ஏற்பட்ட குளறுபடிகள், குழப்பங்களால் ஜெருசேலத்தை தரிசிப்பதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வெறுப்புற்ற கிறிஸ்தவர்கள் சிலுவைப்போர்களை ஆரம்பித்து ஜெருசேலத்தை கைப்பற்றினார்கள்.

சலாவுதீன் அய்யூபி அவர்களால் மீட்கப்பட்ட ஜெருசலேம் மீண்டும் கிறிஸ்தவர்களின் கைகளுக்கு போய்

இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பிறகு அது முஸ்லீம்களிடம் இருந்து யூதர்கள் கைகளுக்கு போனது.

குறிப்பாக சிலுவைப்போர்கள் அப்பாஸிய பேரரசின் இறுதிக் காலங்களில் நிகழ்ந்தது.

மங்கோலியர்களின் படையெடுப்பு அப்பாஸிய பேரரசை காலி செய்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!