Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு -18

(கி.பி 750-1258)

சியா பிரிவை பின்பற்றிய பாத்திமிய சிற்றரசர் அல்ஹாகிம்பில் அம்ருல்லா மன்சூர் என்ற பெயரில் ஆட்சிபீடம் ஏறிய இவர் முதல் உத்திரவாக, கடைகளை பகலில் அடைத்து விட்டு இரவில் திறந்து வியாபாரம் செய்ய ஆணை பிறப்பித்தார்.

பெண்கள் வெளியே வர தடை விதித்தார். வெளியே வரும் பெண்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

நாய்களை கொல்லவும், கழுதைகளை வெளியிடங்களில் சுற்றுவதை தடுக்கவும், ஆணையிட்டார்.

சஹாபாக்களை வசைபாடினார். ஒரு மலைப்பகுதிக்கு சென்று வந்து அல்லாஹ் தன்னிடம் பேசியதாக அறிவித்தார்.

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் புனித உடலை மதினாவிலிருந்து எடுத்து வர ஒரு குழுவை அனுப்பிவைத்தார்.

கஃபா ஆலயத்தில் புதைக்கப்பட்ட புனிதமாக கருதப்படும் சொர்க்கத்து கல் என்று கூறப்படுகிற “அஜ்ருல் அஸ்வத் ” கல்லை எடுத்துவர ஒரு குழுவை அனுப்பினார்.

அதை எடுக்க முயற்சித்து ஏற்பட்ட சண்டையில் அந்த புனிதக் கல் பல துண்டுகளாக உடைந்தது.

உடைந்த துண்டுகளை ஒட்டவைக்கப்பட்ட நிலையில் பதிக்கப்பட்டு இருப்பதை இன்று காணலாம்.

இவ்வளவு மூளைபிசகிய உத்திரவுகளை இட்ட இவர் மரணித்தார். மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அடுத்த ஆட்சியாளராக “அவ்வாஹிர் அபுல்ஹஸன்” பதவி ஏற்றார்.இவரும் பொழுதுபோக்கு சுகபோகங்களில் திளைத்து மரணமடைந்தார். இவரின் காலத்தில் எகிப்தில் பஞ்சமும், தொற்று நோய்களும் பரவி இருந்தன.

அடுத்து “அல்முஸ்தம்சிர் பில்லா அபூதமீம் என்ற 11 வயதே நிரம்பிய சிறுவர் மன்னராக பொறுப்பேற்க அவரின் தாயார் நிர்வாகத்தை கவனித்தார்.

இதனால் நிர்வாக சீர்கேடுகள் ஏற்பட்டு பல பிரதேசங்கள் பிரிந்தன. பஞ்சம் தொற்று நோய்கள் பரவின.

கவர்னர்கள், அமைச்சர்கள் அதிகாரம் பெற்றனர். துருக்கிய இனக் குழுக்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டது.

துருக்கிய வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் துருக்கிய தளபதி நாஸிர்தவ்லா ஹபசி என்பவர் மன்னரை பதவி இறக்க சூழ்ச்சிகள் செய்தார்.

நிலைமையை சமாளிக்க முடியாமல் மன்னர் அல்முஸ்தம்சிர் சிரியாவிலிருந்து “பத்ருஜமாலி” என்பவரை எகிப்திற்கு வரவழைத்தார்.

அவர் துருக்கிய படைத்தலைவர்களை அடக்கி அவர்களிடமிருந்த பொருள்களையும் எடுத்துக் கொண்டு அவர்களை கைது செய்து கலகங்களை கட்டுப்படுத்தினார்.

அவர் நைல்நதியை புணரமைத்தார். வியாபாரங்களை செழிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

சிலுவை வீரர்கள் எகிப்திற்குள் நுழையாமல் பாதுகாத்தார். எகிப்தில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட்டது.

இவருக்கு பிறகு பாத்திமியாக்களின் இறுதி மன்னராக “அல்ஆதித் அப்துல்லாஹ் அபூமுஹம்மது” பதவி ஏற்றார்.

நாட்டில் கலகங்களும், குழப்பங்களும், சண்டைகளும் ஏற்பட்டன. தளபதி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பதவி நீக்கப்பட்ட தளபதி,டமாஸ்கஸ் சென்று நூர்தீன் ஜங்கி அவர்களோடு இணைந்து கொண்டு சோக்கோ மற்றும் சலாவுதீன் அய்யூபி அவர்களோடு எகிப்தை நோக்கி படை எடுத்து வந்து அரசை கைப்பற்றினார்கள்.

பிரதான தளபதி சலாவுதீன் அய்யூபி அவர்கள் கெய்ரோவை கைப்பற்றினார்.

அரண்மனையில் இருந்து ஏராளமான ஆபரணங்கள்,பொற்குவியல்,பல வகையான உயர்வகை கற்கள், ரொக்கப் பணம் ஆகியவற்றை கைப்பற்றி அரசுடமை ஆக்கினார். பாத்திமிய சிற்றரசு வீழ்ந்தது.

மாவீரர் சலாவுதீன் அய்யூபியின் அய்யூபிய சிற்றரசு துவங்கியது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!