Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு-14

(கி.பி 750-1258)

அப்பாஸிய பேரரசர் அவர்கள், புவைஹி மன்னர் சில பகுதிகளை வெற்றி கொண்டதை பாராட்டி,தனது அழகிய மகளையும் புவைஹி சிற்றசின் மன்னர் பக்தியாருக்கு மணமுடித்து கொடுத்தார்.

சிற்றரசருக்கு அப்பாஸிய பேரரசர் தனது மகளை மணமுடித்து கொடுப்பதாக அறிவித்து, மணமுடித்து கொடுத்தது, மற்ற சிற்றரசர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

மேலும் “அல்சுல்தான்” “தாஜுல் மில்லா” “ஷாகின்ஷா” “ஹாக்கிம்ஷா” போன்ற பட்டங்களை கொடுத்து ஆச்சரியமளித்தார்.

மேலும் குத்பா உரையின் இறுதியில் பக்தியாரின் பெயரும் சேர்ந்து வாசிக்கப்பட்டது. பக்தியார் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார்.

தலைநகர் சீராஜை பாக்தாத்தை போல அழகுபடுத்தினார். பல புதிய கட்டிடங்களை கட்டினார்.

பிரமாண்டமான மருத்துவமனையை கட்டினார். அது மருத்துவ மனையாகவும், மருத்துவ பல்கலைக் கழகமாகவும் திகழ்ந்தது.

அதில் 24 மருத்துவ பிரிவுகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தலைமை மருத்துவரும், பல மருத்துவர்களும் பணியில் இருந்தனர்.

பாக்தாத் நகரை மேலும் அழகூட்டினார். இவரது அரசவையில் பல அறிஞர்கள் இருந்தனர்.கலைகள் வளர்ச்சி பெற்றன.

இவரது மரணித்திற்கு பிறகு இவரது மகன் சம்சுத்தௌலா பதவியேற்றார். இவர் மூன்று ஆண்டுகளில் மரணமடைந்தார்.

இவரின் சகோதரர் சரபுத்தௌலா ஆட்சியை கைப்பற்றினார். இவருக்கும் “அமீருல் உம்ரா”பட்டம் வழங்கப்பட்டது.

இவர் மிகச்சிறந்த கல்விமானாகவும், அறிஞராகவும், திகழ்ந்தார்.இவரின் ஆட்சியில் வானவியல் ஆராய்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மிகப்பெரிய பல பயனுள்ள கட்டுமானங்களை கட்டினார்.

இவருக்குப்பிறகு சில தௌலாக்கள் ஆட்சியிலிருந்தாலும் மிக பலவீனமாகவே இருந்தனர்.

புவைஹி சிற்றரசின் இறுதி மன்னராக அல் மலிக்குல்ராஹிம் என்பவர் கி.பி 950 முதல் 954 வரை ஆட்சி செய்தார்.

புவைஹிக்கள் 110 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சியில் நிர்வாகம் சிறப்பாகவே இருந்தது.

இவர்களின் ராணுவம், வலிமையானதாக இருந்தது.புவைஹி மன்னர்கள் மிகுந்த ஆட்சித்திறமை உடையவர்களாக இருந்தனர்.

இவர்களின் ஆட்சியில் சமாதானம் நிலவியது. ஆட்சி அமைதியாக நடை பெற்றது.

இவர்களின் ஆட்சியில் கவிஞர்கள் அறிஞர்கள் அதிகம் மதிக்கப்பட்டனர்.

கட்டிடக்கலை சிறந்து விளங்கியது. ஏராளமான நூலகங்கள் உருவாக்கப்பட்டது.

வணிகமும் செழித்து இருந்தது. இந்தியா, மத்திய தரைக்கடல், செங்கடல் ஆகியவைகளை உள்ளடக்கிய வணிகப் பாதைகளை அமைத்தனர்.

ஆகவே வெளிநாட்டு வணிகம் சிறப்புடன் நடைபெற்றது. இவர்களின் இறுதிக்காலத்தில் செல்ஜுக்கியர்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

அவர்களின் கொள்கை கோட்பாடுகள் மக்களை ஈர்த்தன.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com