Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு-12

(கி.பி 750-1258)

உமைய்யாக்களின் பேரரசு 90 ஆண்டுகள் 14 மன்னர்களோடு சிறப்பான ஆட்சியை வழங்கியது.

அப்பாஸிய பேரரசு‌ ஏறக்குறைய 458 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தாலும் சில மன்னர்களே திறமையான நல்லாட்சியை வழங்கினார்கள்.

அப்பாஸிய ஆட்சியில் பாரசீகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் சியா கொள்கைகள் வலுவாக இருந்தது.

முஃதஸிலா கொள்கைகள் பரவி இருந்தது.முதல் நூறு ஆண்டுகளில் 9 மன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள்.

பிறகு பாக்தாத்தில் அப்பாஸிய மன்னர்கள் கலீபாக்களாக இருந்தாலும், தொடர்ந்து பல சிற்றரசுகள் பல பிரதேசங்களில் தோன்றின.

இதற்கு பல காரணங்கள் இருந்தன. தொடர்ந்து வந்த அப்பாஸிய மன்னர்கள் திறமை இல்லாதவர்களாக இருந்தனர்.

நீதிஇன்றி நடந்தார்கள். குடும்ப மோதல்கள் நடந்தன. பழிவாங்கல்கள் ஒரு பக்க சார்பு நிலை இருந்ததால் அரசில் பல அதிகார மையங்கள் உருவாகி அரசை பலவீனப்படுத்தின.

பரந்து விரிந்து இருந்த பேரரசை நிர்வகிக்க ஒரு சிறப்பான செயல் திட்டம் இல்லை.

கொள்கை கோட்பாடுகளில் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டன.

முறையான அதிகாரங்கள் இல்லாததால் கிளர்ச்சிகள், போராட்டங்கள் என பேரரசு முழுவதும் பரவியது.

உயர் பதவிகளில் இருந்தவர்கள் தங்களது செல்வாக்கால் சிறு சிறு அரசுகளை உருவாக்கினார்கள்.

அதனால் சிற்றரசுகள் குறுகிய ஆயுள் கொண்டதாக இருந்தன.இதனால் அடுத்தடுத்து தொடர்ந்து சிற்றரசுகள் உருவாயின.

அதிகாரங்களை கையில் வைத்திருந்த தளபதிகள் போன்றவர்கள் தங்கள் குடும்ப பெயரில் சிற்றரசுகளை உருவாக்கினர்.

அரேபியர்கள், பாரசீகர்கள், துருக்கியர்கள் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட அதிகார போட்டிகள் சிற்றரசுகள் உருவாக காரணமாயின.

மேலும் மேலும் பிளவுகளை தடுப்பதற்கு, அப்பாஸிய ஆட்சியாளர்களே சிற்றரசுகள் உருவாவதை ஊக்கப் படுத்தினர்.

இதன் மூலம் இரண்டு முறைகளில் சிற்றரசுகள் உருவாயின.

கொள்கை குழப்பங்களால், வேறுபாடுகளால், சிற்றரசுகள் உருவாயின.

பல பிரதேசங்களின் கவர்னர்கள் பேரரசரின் பலவீனத்தை பயன்படுத்தி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேங்களை சுயாட்சி பகுதிகளாக அறிவித்து தங்களை மன்னர்களாக அறிவித்துக் கொண்டனர்.

இதனை அப்பாஸிய மன்னர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

சில சிற்றரசுகள் அப்பாஸிய பேரரசுக்கு ஈட்டுத்தொகைகள் கொடுத்தன.

பல சிற்றரசுகள் அப்பாஸிய பேரரசையே மதிக்காமல் சுயாட்சி புரிந்தன.

இந்த வகையில் துருக்கிய அடிமை படைத் தலைவர்களால் உருவான மம்லூக்கிய சிற்றரசு கி.பி 842 முதல் கி.பி 856 வரை ஆட்சிபுரிந்தன.

ஒரே நேரத்தில் பல பகுதிகளில் பல சிற்றரசுகள் ஆட்சி புரிந்து இருக்கின்றன.

மொராக்கோவை தலைநகராக கொண்டு இப்ராஹீம் இப்னு அஃலப் தலைமையில் ஏற்பட்டஅஃலப் சிற்றறசு கி.பி.796 முதல் 906 வரை ஆட்சிபுரிந்தது.

குராசானை தலைநகராக கொண்டு தாஹிர் இப்னு ஹுசைன் என்பவர் தலைமையில் தாஹிரியா சிற்றரசு கி.பி 815 முதல் 835 வரையிலும்,

ஏமனை தலைநகராக கொண்டு முஹம்மது இப்னு ஜியாத் என்பவர் தலைமையில் ஏற்பட்ட ஜியாதிய சிற்றரசு கி.பி 813 முதல் 1012 வரையிலும்,

சன்ஆ பிரதேசத்தை தலைநகராக கொண்டு ஜாஃபரிய்யா சிற்றரசை ஜாஃபர் இப்னு சுலைமான் என்பவர் தலைமையில் உருவான அரசு கி.பி 857முதல் 997 வரையிலும்,

மௌசில் நகரை தலைநகராக வைத்து ஹம்தானியா சிற்றரசு அப்துல்லாஹ் இப்னு ஹம்தானி அவர்களின் தலைமையில் கி.பி 899 முதல் 999 வரையிலும்,

சீஸ்தான் பிரதேசத்தில் சஃபாரி சிற்றரசு யாகூப் இப்னு லைஸ்அஸ்ஸஃபார் தலைமையில் கி.பி 871 முதல் 999 வரையிலும்,

எகிப்தில் தூலூனிய சிற்றரசு அஹ்மது இப்னு தூலூன் தலைமையில் கி.பி. 864 முதல்902 வரையிலும்,

அஃசீதியா சிற்றரசு அஸீத் இப்னு அஸீதியா தலைமையில் கி.பி 935 முதல் 968 வரையிலும்,

இந்தியா மீது படையெடுத்த‌ முஹம்மது கஜ்னவி தலைமையிலான கஜ்னவி சிற்றரசு கி.பி 961 முதல் 1162 வரை ஆப்கானிஸ்தான் பகுதியிலும் ஆட்சி செய்தன.

சிறப்பாக ஆட்சி செய்த சில சிற்றரசுகளையும் அதன் வரலாற்று திருப்பங்களையும் ஆராய்வோம்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்.!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!