Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு-11


(கி.பி 750-1258)

அப்பாஸிய பேரரசின்
ஒன்பது வலுவான மன்னர்களில் கடைசி மன்னராக அல்வதீஹ் பில்லா ஐந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.

இவரது ஆட்சியிலும்
சியாக்களின் ஆதிக்கங்களும்,
முஃதஸிலா சிந்தனைகளும் அதன் ஆதரவாளர்களும்
அரசாங்கத்தை ஆக்ரமித்து இருந்தனர்.

இவர் இறக்கும்போது எவரையும் அடுத்த ஆட்சியாளராக நியமிக்கவில்லை.

பொதுவாக அப்பாஸியர்களின் ஆட்சியில் பாரசீகர்களின்
ஆதிக்கம் அதிகமிருந்தது.

துருக்கிய அடிமைகள் அதிகம் படைப்பிரிவுகளில் இருந்தனர்.
நிறைய தளபதிகள்
துணைத் தளபதிகள்
துருக்கிய அடிமைகளாக இருந்தனர்.

துருக்கிய அடிமை
கலீபுல்லாஹ்,
மன்னர் அல்வதீஹ் பில்லா இறக்கும்போது தலைமைத்
தளபதியாக இருந்தார்.

மன்னரின் மகனை மன்னராக்க தளபதி விரும்பாமல், மன்னரின் சகோதரர்
ஜாஃபர் என்பவரை மன்னராக பதவியேற்க வைத்தார்.

ஜாஃபார் அவர்கள் முதவ்வகீல் என்று பெயர் சூட்டிக் கொண்டு ஆட்சி புரிந்தார்.

இவர் மன்னருக்குரிய திறமையும், தகுதியும்
இல்லாமல் இருந்தார். இவர் நல்ல குணங்களே இல்லாமல் கொடுங்கோலராக இருந்தார்.

இவருடைய குறிப்பிடத்தக்க‌ பணியாக முஃதஸிலா கொள்கையை அரசாங்கத்திலிருந்து நீக்கினார்.
அதனை புறக்கணித்து ஒழித்தார்.

சுன்னத் வல் ஜமாத் கொள்கையை அரசில் அமல்படுத்தி
அதன் சார்பானவர்களை
அரசாங்க பதவிகளில் அமர வைத்தார்.

பாரசீகர்களின் ஆதரவால் நன்றாக பரவியிரருந்த சியாக்களை கட்டுப்படுத்தினர்.

அரசின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை அடக்கினார்.

இதுபோன்ற கொள்கை மாற்றங்களால் மன்னருக்கும்
துருக்கிய படைத்
தளபதிகளுக்கும்
இடையில் சரியான புரிந்துணர்வு இல்லாமல் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டது.

துருக்கிய அடிமை படைத்தலைவர்கள்
நாளடைவில் செல்வாக்கு பெற்றனர்.

இதனால் பிறகு வந்த மன்னர்கள் கைப்
பொம்மைகளாக
இருந்தனர்.
அவர்களை தங்களின்
எண்ணத்திற்கு ஏற்ப
படைத்தலைவர்கள்செயல்பட வைத்தனர்.

மன்னர் முதவ்வகில்லை தொடர்ந்து மும்தஸிர்,
முஸ்தயின் ,மும்தஸ்,
முஹ்ததிர்,
முஹ்தமின் என்று மன்னர்கள் ஆட்சி புரிந்தாலும்,

துருக்கிய அடிமை படைத்
தலைவர்களின் மம்லூக்கிய சிற்றரசு உருவாவதை தடுக்க முடியவில்லை.

பாக்தாத் நகரில் அப்பாஸிய மன்னர் ஆட்சியில் இருந்தாலும், துருக்கிய அடிமைகளின் மம்லூக்கிய சிற்றரசு உருவானது.

இவர்களின் ஆட்சி
கி.பி 842 முதல் 944 வரையிலான ஏறத்தாழ 102 ஆண்டுகளான
ஆட்சி, அப்பாஸிய மன்னர்களுக்கு பல பாடங்களை போதித்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!