Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யா பேரரசு-10 (கி.பி 661-750)

சைப்ரஸ் தீவின் அரண்மனை பகுதியிலிருந்து சமாதான கொம்பு ஊதப்பட்டது.

அப்போதுதான் சூரியன் மெதுவாக எட்டிப் பார்க்க துவங்கியிருந்தது. அரண்மனையின் உச்சியில் வெள்ளைக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

சைப்ரஸ் தீவின் மன்னர் ரோமப்பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டு ரோமப்பேரரசுக்கு கப்பம் கட்டி வந்தவர்.

அப்போது புதிதாக உருவாகியிருந்த முஸ்லீம்களின் உமைய்யா பேரரசோடு ஒப்பந்தம் செய்து கொள்ள தோல்வி நிலையில் முடிவெடுத்த சைப்ரஸ் அரசர் முஸ்லீம்களின் தளபதி உக்பத் இப்னு நாபீ அவர்களை அரண்மனைக்கு அழைத்தார்.

அரண்மனைக்கு தளபதி அவர்களும் சில குறிப்பிட்ட உபதளபதிகளும் சென்றனர்.

அரண்மனையையும் அதன் ஆடம்பரங்களையும் கண்டு வாயடைத்து போயினர் முஸ்லீம் வீரர்கள்.

உமைய்யா பேரரசர் முஆவியா (ரலி) அவர்களின் எளிமையும் மாளிகையும் நினைவில் வந்து போனது.

தங்க கூரை வேயப்பட்ட விதானங்களும், தூண்களும், பலவகை கற்கள் பதிக்கப்பட்ட கதவுகளும் என ஆடம்பரத்தின் அடையாளமாக இருந்தது சைப்ரஸ் மன்னரின் அரண்மனை.

உணவுகள் உயர்ந்த மரவேலைப் பாடுகளுடன் உடைய மேசையில் தங்க தட்டுக்களில் அடுக்கப்பட்டு இருந்தது.

இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறி முஆவியா (ரலி) போன்ற பேரரசர்களை கூட எப்படி செம்மைப்படுத்தி உள்ளது என்பதை நினைத்த தளபதி உக்பா அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினார்.

மாமிசங்களை தவிர்த்துவிட்டு சாதாரண தட்டுகளை கொண்டு வரச்செய்து எளிமையாக உணவுகளை முடித்து கொண்ட முஸ்லீம் தளபதிகளை பார்த்து, அவர்களின் எளிய உடைகளையும் பார்த்து, அதிசயித்துபோனான் சைப்ரஸ் மன்னன்.

சைப்ரஸ் தீவு உமைய்யா ஆட்சிக்கு கீழ் செயல்படும் எனவும் ஆப்ரிக்க,ஐரோப்பிய நாடுகளுடன் நடக்கும் போர்களில் முஸ்லீம்வீரர்களுடன் கலந்து கொண்டு ஆயுதங்களையும் வழங்கும் என்று சம்மதித்து ஒப்பந்தம் போடப்பட்டது.

ஒப்பந்தத்திற்கு பிறகு அவர்களின் வழிகாட்டல்படி ஆப்ரிக்க நகரங்களை நோக்கி முஸ்லீம்களின் படை நகர தயாரானது.

கப்பல்களில் உணவுப் பொருட்களும், ஆயுதங்களும் , ஏற்றப்பட்டன.

அங்கு தங்கியிருந்த ஒருமாத காலத்தில் இஸ்லாமிய வீரர்களின் ஒழுக்கம் நடத்தைகள், வழிமுறைகளை பார்த்த பல மக்களும் வீரர்களும் ஆச்சரியப்பட்டு இஸ்லாமிய நெறிகளைபற்றி அறிந்து கொள்ள துவங்கினர்.

அதில் இஸ்லாமிய நெறிகளால் திருக்குர்ஆனின் வாசிப்புகளால் ஈர்க்கப்பட்டு பலர் முஸ்லீம்களாக மாறினர்.

ஐரோப்பாவில்ங நாட்டை காப்பது புனிதம், போரில் கலந்துகொண்டால்பாவங்கள் மன்னிக்கப்படும், போரில் பொருள்கள் கிடைத்தால் பங்கீடு என்று வீரர்களை மூளைச்சலவை செய்த நிலையில்,

உமைய்யா ராணுவ வீரர்களுக்கு மாதச்சம்பளம் வழங்கப்பட்டது. இதனாலும் பல வீரர்கள் உமைய்யா ராணுவத்தில் இணைந்தனர். இது உமைய்யா ராணுவத்தை மேலும் வலுவாக்கியது.

சைப்ரஸ் மன்னர் கலீபாவிற்கு கொடுத்த பரிசுப் பொருட்களோடு ஒரு கப்பலும் சைப்ரஸ் நகரின்சில துணைகப்பல்களும் டமாஸ்கஸ் நகரை நோக்கி ஒரு உபதளபதியின் தலைமையில் கிளம்பியது.

இக்கப்பல் கடல் கொள்ளையர்களின் கப்பல்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com