Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

பகுதி -1

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு -8
(கி.பி.661-750)

இஸ்லாமிய உலகின் ஒற்றுமைக்காக என் ஆட்சியையும் உங்களிடமே ஒப்படைக்கிறேன்.
முஸ்லீம்களிடையே
சண்டை ஏற்பட்டு ரத்தம் ஓட்டவேண்டாம்
என்றே தங்களிடம் எனது ஆட்சியை ஒப்படைக்கிறேன்

ஆனால் உங்களுக்கு பிறகு ஆட்சியை என்னிடமும்,எனது தம்பியிடமும் ஒப்படைத்து விடவேண்டும் என்று நிபந்தனை குறிப்பிட்டு முஆவியா (ரலி) அவர்களுக்கு ஹஸன் (ரலி) அவர்கள் ஒப்பந்த செய்தி அனுப்பினார்கள்.

முஆவியா (ரலி) அவர்களும் இதனை ஏற்றுக்
கொண்டார்கள்.

பிறகு முஆவியா (ரலி) அவர்கள் தனது ஆட்சியை நிலைப்படுத்த திட்டங்களை வகுத்தார்கள்.
ராணுவப் படையை கட்டமைத்தார்கள்.

முஆவியா (ரலி) அவர்கள்,உமர்(ரலி) அவர்கள் கலீபாவாக இருந்த காலத்திலேயே தூரநாடுகளுக்கு பயணப்பட கப்பல்படைக்கு அனுமதி கோரினார்கள்.
உமர் (ரலி )அவர்கள் சில காரணங்களுக்காக கப்பல் படைக்கு அனுமதி வழங்கவில்லை.

உதுமான் (ரலி) ஆட்சிக்கு வந்ததும் அவர்களிடம் பேசி முஆவியா (ரலி) அவர்கள் கப்பல்படைக்கு அனுமதி வாங்கி விட்டார்கள்.

கப்பல்படை கட்டமைக்கப்பட்டதும்
முஸ்லீம்களின் கடல்பயணம் எளிதாக இருந்தது.

அப்படி சிறப்பாக கட்டமைக்கப்பட்ட கடற்படை தான் சைப்ரஸ் தீவு அருகில்
உக்பத் இப்னு நாபீ என்ற கப்பல்படை தளபதியின் தலைமையில்
தாக்குதலுக்கு தயாராக நின்றது.

இரவு..நெருங்க..
நெருங்க..
மெதுவாக கப்பல்கள் கடற்கரையை நோக்கி நகர்ந்தன.

முஸ்லீம்களின் கப்பல்களில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தன.

கடற்கரையிலிருந்த
கலங்கரை விளக்கத்தின் ஒளி பளீர் பளீரென கடலில் வீசியது.

சைப்ரஸ் துறைமுகம் தூக்க கலக்கத்தில் இருந்தது.
துறைமுகத்தில்
சிறிதளவே வெளிச்சம் தெரிந்தது.

அதில் கப்பல்கள் ஆடி அசைந்து கொண்டிருந்தன.
கரையின் இருபுறங்களிலும் கப்பல்கள் அணிவகுத்து நின்றன.

எதிரி கப்பல்கள் துறைமுகத்திற்குள்
நுழைந்தால் இந்த அணிவகுப்பிற்குள்
தான் நுழைய வேண்டும்.

இருபுறத்திலிருந்தும் எதிரி கப்பல்களை வளைத்து அழித்து விடலாம் என சைப்ரஸ் துறைமுகத்
தலைவனின் யோசனையை முஸ்லீம்களின் தளபதி உக்பா பெரிதும் ரசித்தார்.

அவரின் திட்டங்கள்..
எதிரி நினைத்தது போலவே இருக்க..
முஸ்லீம் படையின் உதவி தளபதிகள் ஆச்சரியமடைந்தனர்.

முஸ்லீம்களின் கப்பல்கள் துறைமுகத்தின் நடுப்பகுதியில் வேகமாக நுழைந்தன.

அதிர்ச்சியும்..
ஆச்சரியமும் கலந்த நிகழ்வுகள் துவங்கின..!

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

 

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com