Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின்பேரரசு-24


(கி.பி‌ 661-750)

உமைய்யாக்களின் பேரரசராக வலீத் இப்னு அப்துல் மலீக் அவர்கள்
பதவியேற்றார்.

இஸ்லாமிய பேரரசு
உலகின் பெரும்பகுதிகளை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது.

முழுஆப்ரிக்கா,
ஐரோப்பா, இந்தியாவில் சிந்து, முல்தான், மேற்குபஞ்சாப் மற்றும் சீனாவின் எல்லைவரை விரிவடைந்தது.

இந்தப்பகுதியில்
முஸ்லீம்கள் தானாக எங்கும் படை எடுக்கவில்லை.
அந்தந்த நாடுகளின்
அரசர்கள், அதிகாரிகள், மதகுருமார்கள் போன்றவர்களின்
அநியாயங்களை தாங்க முடியாத மக்களே முஸ்லீம் ஆட்சியின் சிறப்புகளை அறிந்து தங்கள் சொந்த நாட்டின் மீதே படை எடுக்க அழைப்பு விடுத்தார்கள்.

முஸ்லீம்களின் சிறப்பான ஆட்சியை அறிந்த ஸ்பெயின் நாட்டின் சியூட்டா மாகாண கவர்னர் ஜுலியன் தனது மகளுக்கு ஸ்பெயின் மன்னன் ரோட்ரிக்ஸ் இழைத்த அநீதிக்கு பழிவாங்க முஸ்லீம்களின் துனிஷியா கவர்னர்
மூஸா இப்னு நுஸைருக்கு கடிதம் எழுதினார்.

ஸ்பெயினின் உண்மையான ஆட்சியாளர்
களிடமிருந்து
ரோட்ரிக்ஸ் மன்னன் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியாளராக இருந்தான்.

சியூட்டா கவர்னர் ஜுலியன் தனது அழகு மகளை கல்வி கற்பதற்காக டொலிடோ நகரில் உள்ள ஸ்பானிஷ் அரசவைக்கு‌ அனுப்பி வைத்தார்.

தனது மகளை மானபங்கப்படுத்தி
சிறையிலடைத்த ரோட்ரிக்ஸ் மன்னனின் அட்டூழியங்கள் நாள்தோறும் பெருகின.

ஸ்பெயின் மக்கள் வெறுப்புற்றனர்.
ஸ்பானிய அரசவையும் ரோட்ரிக்ஸ் மன்னனுக்கு பாடம் கற்பிக்க ஒப்புதல் தர ,
முஸ்லீம்களின் படைக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

இந்த செய்தி டமாஸ்கசிலுள்ள பேரரசர் வலீத் இப்னு அப்துல் மலீக் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

பேரரசர் அவர்களும் ஒப்புதல் அளித்து சில ஆலோசனை
களையும் வழங்கியிருந்தார்.

அதன்படி 400 வீரர்கள் கொண்ட படையை முதலில் அனுப்பி நிலைமைகளை
அறிந்துகொள்ளலாம்
என்று முடிவு செய்தார்கள்.
வீரர்கள் சென்று நிலைமைகளை அறிந்து பல தகவல்களோடு திரும்பி வந்தனர்.

முழுமையான படைஎடுப்புக்கான ஆலோசனை நடைபெற்று அதில் தாரிக் இப்னு ஸியாத் என்ற மகத்தான வீரரின் தலைமையில்
5000 வீரர்கள் கொண்ட படையை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

முஸ்லீம்களின் கப்பல்களில் ஸ்பெயின் கொடிகள் பறக்கவிடப்பட்டன.

கப்பல்படை சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவாக ஸ்பெயினின் கடற்கரையை நோக்கி நகர்ந்தது.

இந்த திட்டத்தால் ஸ்பெயின் வீரர்களால் முஸ்லீம்களின் படைகளை அறியமுடியவில்லை.

முஸ்லீம்களின் படைகள் ஒரு மலைக்குன்றின் அருகில் கரையில் இறங்கின.

ஐரோப்பாவில் முஸ்லீம்களின் வரலாற்று சிறப்புமிக்க வரலாறு தொடங்கியது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

 

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

 

உமைய்யாக்களின் பேரரசு-25


(கி.பி 661-750)

ஜிப்ரால்டர் மலை
குன்றின் அருகில் சிறிது சிறிதாக வந்து இறங்கிய படைகள்
ஒன்றிணைந்தன.

ஐபீரியன் தீபகற்பத்தில் முஸ்லீம்கள் வந்திறங்கிய சிறுசிறு
கப்பல்கள் அணிவகுத்து நின்றன.

தளபதி தாரிக்பின் ஸியாத் அவர்கள் இட்ட உத்தரவு இன்றுவரை வரலாற்றில் ஆச்சரியமான நிகழ்வாக பேசப்படுகிறது.

தனது கப்பல்களை அனைத்தையும் தீயிட்டு கொளுத்தும்
படி உத்தரவிட்டார்.
சில வரலாற்று ஆசிரியர்கள் இதனை மறுத்தாலும், தாரிக் பின் ஸியாத் அவர்கள் தனது வீரர்களுக்கு ஆற்றிய அற்புதமான உரை இதனை உண்மையெனவே
நிரூபிக்கிறது.

தனது படைகளுக்கு எதிரே கம்பீரமான குரலில் பேச ஆரம்பித்தார் தளபதி தாரிக் பின் ஸியாத்.

எனதருமை வீரர்களே..!
நம் பின்னே கடல்.
நம்முன்னே எதிரிகள்.
யுத்தம் ஒன்றே இப்போதைய வழி.

ஆகவே,
பொறுமையோடும்,
ஈமானிய உறுதியோடும்,
போரிடுங்கள்.
வெற்றி அல்லது வீரமரணம் இவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்
என்று வீர உரை நிகழ்த்தினார்.

முஸ்லீம்களின் உதவிப்படை மேலும் 5000 வீரர்களுடன்
வந்திறங்கியது.

ரமலான் பிறை 28 அன்று முஸ்லீம்களின் படை தாரிக் இப்னு ஸியாத் தலைமையில் வந்து முகாமிட்டது. எதிரியின் நிலவரத்தை அறிய ஒற்றர்கள் அனுப்பப்பட்டனர்.

முஸ்லீம்களின் படையெடுப்பு செய்தி தாமதமாக கிடைத்த காரணத்தால், ஸ்பானிய படைகள்
வெகு தாமதமாகவே வந்தது.களைப்பு தீர தூரத்திலேயே
முகாமிட்டுதங்கியது.

மன்னர் ரோட்ரிக்ஸ் கூடாரம் படையின் நடுப்பகுதியில் பிரமாண்டமாக இருந்தது.
தளபதி தாரிக் இப்னு ஸியாத் அவர்களே ஸ்பானிய வீரனைப் போல மாறுவேடமிட்டு, உளவு பார்க்க ஸ்பானிய படைகளுக்கு இடையே புகுந்து மன்னர் ரோட்ரிக்ஸ் கூடாரத்தை அடைந்து , அதிலிருந்த சிறு சாளரத்தின் வழியாக உள்ளே நோக்கினார்.

மன்னர் ரோட்ரிக்சை சுற்றி பெண்கள் இருந்தனர்.
மதுவை தங்க குவளைகளில் ஊற்றி மன்னருக்கு கொடுத்து கொண்டு இருந்தனர்.
அழகிகளின் நாட்டியமும்,
இசையுமாக கூடாரம்
கலகலப்பாக இருந்தது.

போரின்போது கூட ஒழுக்கமில்லாமல்
குடித்து கும்மாளம் அடிக்கும் அவர்களின் நாகரிகத்தை நினைத்து தளபதி தாரிக் வெறுப்படைந்தார்.

படைப்பிரிவுகளை
சுற்றி பார்வையிட்டு
அதிகாலை தனது கூடாரத்திற்கு வந்து பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு தனது துணைதளபதிகளை
வரவழைத்து ஆலோசனை செய்து
திட்டங்களை சொன்னார்.

இதற்கிடையில் முஸ்லீம்களை ஆதரித்து வரவழைத்த ஜுலியன் ஸ்பானிய வீரர்களிடையே
முஸ்லீம்களின் நற்பண்புகளை எடுத்துரைத்து,

முஸ்லீம்கள் நம்மை இந்த கொடுங்கோலன்
ரோட்ரிக்ஸ் மன்னரிடம் இருந்து
காப்பதற்கே படை எடுத்து வந்துள்ளனர்
என்று பிரச்சாரம் செய்ய ஸ்பானிய படைகளிடம் குழப்பங்கள் ஏற்பட்டு,
பல வீரர்கள் படையில் இருந்து விலகி ஓடினர்.

பல வீரர்கள் முழுமனதோடு போரில் ஈடுபடவில்லை.
இருப்பினும் ஸ்பானிய வீரர்களின் எண்ணிக்கை, முஸ்லீம் வீரர்களின் எண்ணிக்கையை
விட
அதிகமிருந்ததால், போர் கடுமையாகவே
நடந்தது.

இருப்பினும் தளபதி தாரிக் இப்னு ஸியாத் அவர்கள் வகுத்த திட்டப்படி, முஸ்லீம்களின் படை பிரிவு ஒன்று ஸ்பானிய படைகளை
பக்கவாட்டில் ஊடுறுவி பின்புறம் சென்று முன்புறம் தாக்கத் துவங்கியது.

முன்புறமும், பின்புறமும், முஸ்லீம்களின் படைகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட ஸ்பானிய படை தோல்வி அடைய, ரோட்ரிக்ஸ் மன்னன் பின்வாங்கி ஓடிவிட்டான்.

முஸ்லீம்களின் படைகள் ஸ்பானிய நகரங்களை கைப்பற்றி கொண்டே முன்னேறின.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!