Home செய்திகள்மாநில செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு -17
(கி.பி 661-750)

பேரரசரும் தனது தந்தையுமான முஆவியா(ரலி) மரண செய்தி அறிந்த யஜீது அவர்கள் ,பயணம்‌ செய்து மிக வேகமாக டமாஸ்கஸ் நகரை வந்தடைந்தார்.

நேராக தனது தந்தையின் அடக்க இடத்திற்கு சென்று ஜியாரத் செய்துவிட்டு தனது மாளிகைக்கு சென்றார்.

தனது உதவியாளரிடம் உடனடியாக மக்களை டமாஸ்கசின் பெரிய ஜும்மா பள்ளிவாசலில் ஒன்று கூட்ட ஆணையிட்டார்.

வீட்டிலிருந்து புத்தாடை அணிந்து
ஜும்மா பள்ளிவாசலுக்கு வந்த அவர் உமைய்யா பேரரசராக தன்னை அறிவித்தார்.அதன் அடையாளமாக தனது தந்தையின் வாளை
ஜும்மா மசூதியின் மூத்த ஆலிமிடம் கொடுத்து பெற்றுக்கொண்டார்.

உமைய்யா பேரரசின்
சக்ரவர்த்தியாக யஜீதை எல்லா மாநில ஆளுநர்களும் ஏற்றுக் கொண்டனர்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)
அப்துல் ரஹ்மான் இப்னு அபூபக்கர்(ரலி)
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி)
ஹுசைன் இப்னு அலி (ரலி)போன்ற மிகச்சில முக்கிய தோழர்கள் யஜீதை இஸ்லாமிய அரசின் அரசராக ஒப்புக்
கொள்ளவில்லை.

ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும், முக்கிய துறைகளிலும், உமைய்யா வம்சத்தினரே பதவியில் இருந்ததால் யஜீதிற்கு நிர்வாகம் செய்வது மிக எளிதாக இருந்தது.

முஆவியா (ரலி) அவர்களின் மூத்த மனைவி மைசூன் அவர்களுக்கு மகனாக பிறந்தார் யஜீத்.

முஆவியா (ரலி) அவர்கள் மைசூனை
கருத்துவேறுபாட்டால்
விவாகரத்து செய்து விட்டார்கள்.

ஆகவே சிறுவயதில்
தனது தாய் மற்றும் சித்தியின் வீட்டில் யஜீத் வளர்ந்தார்.

அவர் வாலிபர் ஆனதும் யஜீதை தனது மாளிகைக்கு அழைத்துக் கொண்டார் முஆவியா (ரலி.)

யஜீதிற்கு எல்லாவகையான கலைகளையும் முஆவியா (ரலி) அவர்களே கற்றுக்
கொடுத்தார்கள்.

யஜீத் மிகவும் புத்திசாலியாக இருந்தார்.
நல்ல
பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

பன்முக திறமையாளராக
உருவான யஜீத் அவர்களை ஒரு படையெடுப்பிற்கு
முஆவியா (ரலி) அவர்கள் அனுப்பி
வைத்தார்கள் .

படை செல்லும் வழியில் அந்தப்பகுதியில்
அம்மைநோய் பரவி இருப்பதாக தகவல்கள் வர நிலைமையை முஆவியா (ரலி) அவர்களுக்கு யஜீத் தெரிவித்தார்.

இருப்பினும் முஆவியா (ரலி) அவர்கள் அங்கு போயே ஆகவேண்டும் என்று கட்டளையிட அப்பகுதிக்கு சென்றார் யஜீது.

அதன்காரணமாக 19 வயதே ஆன அப்போதைய யஜீதின் அழகிய முகத்தில் அம்மைதழும்புகள் ஏற்பட்டது.
அவர்களின் அழகிய முகத்தை தாடி மேலும் அழகுபடுத்தியது.

யஜீது அவர்களின் ஆட்சியில் ஏற்பட்ட மூன்று நிகழ்வுகள் முழு முஸ்லீம் சமூகத்தையே முகம் சுளிக்க வைத்தது.

அதனாலேயே யஜீது இன்று வரை தவறானவராகவே பேசப்படுகிறார்.

நிகழ்ச்சிகளையும் காரணங்களையும் ஆராய்வோம்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

 

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com