Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

by syed abdulla

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு-16 (கி.பி 661-750)

முஆவியா (ரலி) அவர்களின் மாளிகை பரபரப்பாக இருந்தது. முஆவியா (ரலி) அவர்களின் மரணவேளை நெருங்கி இருந்தது.

முஆவியா (ரலி) அவர்கள் இருபது வருட காலம் மிகச்சிறந்த கவர்னராக பணியாற்றினார்கள்.

பிறகு பாரசீக, ரோமப் பேரரசுகளின் பெரும்பகுதிகளை வென்று உலகின் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு நாடுகளை வென்று சிரியாவின் டமாஸ்கஸை தலைநகராக கொண்ட‌‌மிகப் பெரிய பேரரசை கட்டமைத்து சக்ரவர்த்தியாக ஆட்சி செய்தார்கள்.

இருபது வருடங்கள் மிகச்சிறந்த மன்னராகவும் பணியாற்றிவிட்டு இறப்பின் இறுதி கட்டத்தில் இருந்தார்கள்.

அவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே தனது மகன் யஜீதை அடுத்த மன்னராக அறிவித்தபோது அதனை அனைத்து மாகாண ஆளுநர்களும், தளபதிகளும், ஏற்றுக் கொண்டதால், ஆட்சியில் வேறு குழப்பங்கள் ஏற்படவில்லை.

அடக்கம்,சாந்தம் , அமைதி என்று மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்தார்கள்.

அவர்களின் காலத்தில் அரசாங்க ஆவணங்கள் மற்றும் கட்டளைகளை முத்திரையிட்டு பாதுகாக்கும் முறையை உருவாக்கினார்.

தபால் சேவைகளை சீர்திருத்தி தபால் “திணைக்களம்” ஒன்றை உருவாக்கினார்

பலமிக்க இராணுவப் படைகளின் வீரர்களை பல்வேறு கோத்திரங்கள், பிரிவுகளில் இருந்தும், உருவாக்கி அவர்களுக்கு முறையான மாதச்சம்பளம் வழங்கினார். ஆகவே இராணுவம் மிகுந்த கட்டுக்கோப்பாக இருந்தது.

நாட்டில் விவசாயம், மற்றும் தொழில்களை ஊக்கப்படுத்தி பெரும் புரட்சி செய்தார்.அதனால் பொருளாதாரம் மேம்பட்டது.

முஆவியா (ரலி) அவர்கள் ஒரு கிறிஸ்தவ பெண்ணை மணந்து இருந்தார்கள்.ஆகவே வைத்தியர்கள் புலவர்கள் என அரசவையில் நிறைய கிறிஸ்தவர்கள் பணியாற்றினார்கள்.

ஒருபிரச்சினையை கசையால் தீர்க்கமுடியமாயின் அங்கு வாளைப்பயன்படுத்த மாட்டேன். ஒருபிரச்சினையை நாவால் தீர்க்க முடியுமாயின்,அங்கு கசையை (சவுக்கு) பயன்படுத்த மாட்டேன் என்ற அவர்களின் சொற்கள் மிகுந்த மனிதநேயம் மிக்கதாகும்.

இறுதியில், ஹிஜ்ரி 60 ம் ஆண்டு அவர்களின் மரணம் நிகழ்ந்தது.

முஆவியா (ரலி) அவர்கள் தங்களோடு ஒரு பெட்டியை பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

தான் மரணமடையும் போது அதை திறந்து அதிலிருக்கும் பொருட்களோடு தன்னை அடக்கம் செய்துவிட சொல்லி இருந்தார்கள்.

முஆவியா (ரலி) அவர்களின் குறிப்புப்படி, பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் ஜிப்பா முடி ,நகம் ஆகியவைகள்

பெட்டியில் இருந்தன. ஜிப்பாவை தனது கபன்உடன் சேர்த்து அணிவித்து விடவும் முடி மற்றும் நகங்களை காது மூக்கு இவைகளில் வைத்து தன்னை அடக்கி விடும்படியும் குறிப்பு எழுதி வைத்து இருந்தார்கள்.

அதைப்பார்த்து அனைத்து தோழர்களும் அழுதார்கள்.

இறுதியில் அவர்களின் உடல் டமாஸ்கஸ் நகரில்8 இறுதித் தொழுகையோடு அடக்கம் செய்யப்பட்டது.

முஆவியா (ரலி) அவர்கள் மரணமடைந்தபோது யஜீத் வெளியூரில் இருந்தார்.

அவர் வரும் முன்பே ஜனாஸா தொழுகை தொழவைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார்கள்.

யஜீதின் ஆட்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்…! இஸ்லாமிய உலகை அதிர்ச்சி அடைய வைத்தன..!

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!