ஈருலகிலும் வெற்றி பெற சிறப்பு விளக்க பொதுக் கூட்டம்…

வரும் ஜுன் மாதம் 22ம் தேதி மாலை 4 மணி முதல் மாபெரும் விளக்க பொதுக் கூட்டம் ஈருலக வெற்றியை நோக்கி என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இம்மாநாடு இஸ்லாமியா பள்ளி (கிஷ்கிந்தா) மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் மார்க்க கல்வியின் இன்றைய நிலையும் மாற்றத்திற்கான வழியும் என்ற தலைப்பில் அஷ்ஷெய்க்.அப்துல் மஜீத் மஹ்ளரி மற்றும் மார்க்க கல்வியும் மறுமை வெற்றியும் என்ற தலைப்பில் மௌலவி.அப்துல் பாசித் புஹாரி ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பல போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்ச்சி கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பாக நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி பற்றிய கூடுதல் விபரங்களுக்கு 74489 84744 மற்றும் 98940 54547 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.