பேச்சுப் போட்டியில் பரிசுகள் வென்ற இஸ்லாமியா பள்ளி..

07.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ராமநாதபுரம் தமிழ் சங்கம் நடத்திய திருக்குறள் வேள்வியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளது.

அப்போட்டியில் இஸ்லாமியா பள்ளி 4ஆம் வகுப்பு மாணவன் பவாஸ் அமீன் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 5 நிமிடத்தில் 90 குறள் ஒப்புவித்து முதல் பரிசு பெற்றார். மேலும் பேச்சுப்போட்டியில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஆயிஷத் ருக்சானா முதல் பரிசும், இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி மாணவி அல் மஜா கட்டுரைப்போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

பரிசுகளை வென்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பள்ளி நிர்வாகத்தினர் கௌரவித்தனர்.