Home செய்திகள் கல்விக்கு கொரோனா தடையில்லை… புதிய ஆய்வுக்கும்.. விழிப்புணர்வுக்கும் ஒரு வாய்ப்பே.. அசத்தும் இஸ்லாமிய பள்ளி இளஞ்சிறார்கள்…படம் மற்றும் வீடியோ காட்சிகளுடன்..

மனித இனத்தின் வளர்ச்சியும், புதிய தேடல்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் இக்கட்டான சூழல்களும், தேவைகளும் உருவாகும் தருணங்களே.  அதன் அடிப்படையில் கடந்த வாரம் வரை கொரோனோ என்ற ஒரு கொடிய வைரஸ் நம் வாழ்கை முறையையே மாற்றிவிடுமா என்ற எண்ணம் கூட இல்லாத வேலையில், மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் எந்தடைகள் ஏற்பட்டாலும் கல்வி கற்பதில் தடை ஏற்படக்கூடாது என்ற முயற்சியில் தேவைக்கேற்ப அறிவியல் உதவியுடன் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கும் சிறார்கள் இருந்தே இடத்திலே கல்வி கற்கும் வகையில் அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

இந்த தொலைதூர கல்வி கற்கும் திட்டம் மூலம் பாட புத்தகங்கள் மீது மட்டும் அக்கறை காட்டாமல், கொரோனா வைரஸால் ஏற்படும் பிரச்சினைகள், அதை தடுப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் கற்று கொடுத்து வருகின்றனர்.

மேலும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் வைரஸ் சம்பந்தமான வரைதலை ஊக்கவித்தும், விழிப்புணர்வு சம்பந்தமான வீடியோக்களை எடுத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து வருகின்றனர். நிச்சயமாக இஸ்லாமிய பள்ளி நிர்வாகமும், அப்பள்ளியின் மாணவ, மாணவிகளும் பாராட்டுதலுக்கு உரியவர்களே.. மாணவர்களின் படைப்புகள் வீடியோ தொகுப்பாக கீழே உங்கள் பார்வைக்கு…

https://youtu.be/_6G0xvBG8nI

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!