கீழக்கரையில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..

கீழக்கரையில் இஸ்லாமிய பள்ளியில் நேற்று (14-04-2017) பள்ளி வளாகத்தில் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையருக்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சஹீம் மஹ்னாஜ் மற்றும் சித்தி ஹனூனா ஆகியோரின் கிராத்துடன் தொடங்கியது. பின்னர் பள்ளி மாணவர் அஹ்மத் அல்ஹீனா வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் தலைமையுரையை தெற்கு தெரு ஜமாத் தலைவர் உமர் களஞ்சியம் வழங்கினார். அதைத் தொர்ந்து மாணவி மஹ்மூதா ராணி மலழையர் பட்டமளிப்பு விழா உரையை வழங்கினார். பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை புதுக்கல்லூரி முதல்வர் டாக்டர். ஜாகித் உசேன் சிறப்புரை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து சென்னை GREATA ENTERPRISE இயக்குனர் சிராஜுதீன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் நிக்ழ்ச்சியின் இறுதியாக பள்ளி மாணவி ரிஜா ஹுமைரா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் மூத்த ஆசிரியப் பெருமக்கள், நிர்வாகிகிள் மற்றும் நூற்றுக் கணக்கான பெற்றோரகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..