54
இராமநாதபுரம், செப்.5- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 66வது வீரவணக்க நாள் விழா செப்.11ல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் மகள் பிரபாராணி மற்றும் குடும்பத்தினர், தேவேந்திரர் பண்பாட்டு கழகத் தலைவர் பரம்பை பாலா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து தியாகி இமானுவேல் சேகரன் வீரவணக்க நாள்அழைப்பிதழை வழங்கினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ உடன் இருந்தனர்.
You must be logged in to post a comment.