சோதனை என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை பழிவாங்குகிறார்கள் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி..

உசிலம்பட்டியில் மறைந்த முன்னாள் பார்வட் ப்ளாக் பொதுச்செயலாளர் பி.கே.மூக்கையாத்தேவர் 97வது பிறந்தநாளை முன்னிட்டு உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் திமுக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்டுக்கட்டாக அல்ல லாரி லாரியாக பணம் எடுக்கப்பட்ட வேண்டுமென்றால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும், துணை முதல்வர் ஓ.பி.எஸ் வீட்டிலும் கிடைக்கும் எனவும் சோதனை அடிப்படையில் எதிர்க்கட்சிகளை பழிவாங்குகிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் தேனி தொகுதியில் ஒவ்வொரு ஆரத்திக்கும் ரூ.500ம் வாக்காளர்களுக்கு 10 ஆயிரம் வரை வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்…